தனது திருமணம் குறித்து லைவ் பேட்டியில் கூறிய ஷெரின் – எப்ப அவர் வர போறாரோ.

0
897
sherin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமாக நிறைவடைந்த இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் பங்கேற்றனர். அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான நடிகை ஷெரின் இந்த சீசனில் கலந்துகொண்டிருந்தார்.

-விளம்பரம்-
sherin

துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த ஷெரின் அதன்பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்துள்ளார் ஷெரின்.சமீபத்தில் லைவ் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷெரினிடம் ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேட்டிருந்தார்.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த ஷெரின், திருமணம் செய்துகொள்ள நம் வாழ்க்கையில் ஒருத்தர் இருக்கணும் இல்ல. இப்போதைக்கு அப்படி யாரும் எனக்கு இல்ல. எல்லாத்துக்கும் மேல, இப்போ நாம ஊரடங்கில் இருக்கிறோம். நான் இப்போது வீட்டில் உள்ள இருக்கேன். விரைவில் என்னுடைய ராஜா வெளியில் வருவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஷெரின்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு காதல் கதை ஓடியது, அதில் முதலில் ஆரம்பித்தது அபிராமி மற்றும் கவின் ரொமான்ஸ் தான் அதன் பின்னர் அபிராமி -முகேன், சாக்க்ஷி – கவின், லாஸ்லியா – கவின் என்று பல்வேறு காதல் கதைகள் மாறி மாறி ஓடி வந்தாலும் ஒருபுறம் தர்ஷன் மற்றும் ஷெரின் காதல் கதையும் ஓடத்துவங்கியது.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் மற்றவர்கள் கண்ணுக்கு இவர்கள் இருவரும் காதலிப்பது போலத்தான் தெரிந்தது. ஆனால், இருவருமே கடைசி வரை காதல் குறித்து எந்த ஒரு மூச் பேச்சும் விடவில்லை. அவ்வளவு ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே தர்ஷன் சனம் ஷெட்டியுடன் நிச்சயம் முடித்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சனம் ஷெட்டியை பிரிந்துவிட்டார். தர்ஷன் தன்னை பிரிந்ததுக்கு ஷெரினும் ஒரு வகையில் காரணம் என்று சனம் ஷெட்டி பல முறை கூறியுள்ளார்.

Advertisement