வெளியில் செல்லவிடாமல் ஷெரினின் செருப்பை கழட்டும் செல்ல நாய். செம குயூட் வீடியோ.

0
11051
Sherin
- Advertisement -

“அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ஷெரின். தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஷெரீனுக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது சினிமாவில் தலைகாண்பித்து வந்தார். மேலும், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க என்ற படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷெரின். ஆனால், அதன் பின்னரும் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

இடையில் ஷேரினை ரசிகர்கள் முற்றிலும் மறந்திருந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதுமட்டு இல்லைங்க பிக் பாஸ் வீட்டில் சூப்பராக விளையாடினார்.தன்னுடைய வீட்டில் எப்படி இருந்தாரோ, அதே மாதிரி தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்று பலரும் ஷெரீனை பாராட்டினார்கள். அது மட்டும் இல்லைங்க கமலஹாசன் கூட அவரை வாழ்த்தி வந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பல்வேறு எதிர்ப்பையும் மீறி காதலரை திருமணம் செய்த பிச்சைக்காரன் பட நடிகை.

பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடியும், அனைவரிடமும் அன்பு பகிர்ந்து இருந்தார் என்பதால் பிக்பாஸ் குழு ‘பெஸ்ட் படி(best buddy)’ என்ற விருதை வழங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னராவது ஷெரீனுக்கு பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதும் அம்மணி சமூகவலைதளத்தில் தான் பிசியாக இருந்து வருகிறார். அதே போல தனது செல்லப் பிராணியாக ஒரு குட்டி நாயை வளர்த்து வருகிறார் ஷெரின். இதுகுறித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து போதுகூட கூறியிருக்கிறார். அடிக்கடி தனது செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படங்களை கூட தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது செல்ல நாய் தன்னிடம் சேட்டை செய்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அந்த வீடியோவில் ஷெரினை வெளியில் செல்லவிடாமல் அவரது செல்ல நாய் குரைத்தபடி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஷெரினை வெளியே செல்ல விடாமல் இருக்க அவரது காலணிகளை கூட ஒவ்வொன்றாக கடித்து குதறுகிறது, அதற்கு பின்னர் அந்த நாயுடன் வெளியில் சென்று உள்ள ஷெரின் அதற்கு நாய்கள் உண்ணும் ஐஸ் கிரீமை வாங்கி கொடுத்து அதனை சமாதானம் செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நாய்க்கு கூட ஐஸ்க்ரீம் இருக்கிறதா என்ன என்று மிகவும் வியப்புடன் பகிர்ந்து வருகிறார்கள் இருப்பினும் இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கிறது

Advertisement