‘இதுக்கு ஒரு முடிவு கட்டு’ – பவானிக்கு ஆதரவாக ஷெரின் போட்ட பதிவு. (பாவம், இவங்களுக்கு நடந்தது ஞாபகம் இருக்கா)

0
585
sherin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும். ஆனால், இந்த சீசனில் இருக்கும் பலர் திருமணமானவர்கள் என்பதால் அப்படி எதுவும் பெரிதாக இதுவரை வரவில்லை. இருப்பினும் வருண் – அக்ஷரா ஆகிய இருவர் பற்றி முடிச்சுப் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர். இவர்கள் இருவரையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருவது அபிநய் மற்றும் பவானி உறவுதான் . அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது ராஜு, அபிநய்யிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

-விளம்பரம்-

பவானி மற்றும் அபிநய் இருவரும் தங்களுக்குள் எதுவும் இல்ல என்று சொன்னாலும் இவர்களை முடிச்சி போட்டு இன்னும் பேசிக்கொண்டு தான் வருகின்றனர். நேற்று நடைபெற்ற டாக்கில் கூட சிபி, அநபிய்க்கும் பாவனிகும் இருப்பது நட்பும் இல்லை காதலும் இல்லை. ஆனால், அவர்களுக்குள் இருக்கும் உறவு பற்றி யாருக்கும் புரியவில்லை என்று கேள்வி கேட்டிருந்தார் இதற்கு ஒரு சிலர் ஆம் என்றும் ஒரு சிலர் இல்லை என்றும் கூறி இருந்தார்கள்.

- Advertisement -

இந்த டாஸ்க் முடிந்த பின்னர் இதுகுறித்து சிபியிடம் விளக்கம் கேட்டு இருந்தார் பாவணி. பிக்பாஸ் வீட்டில் பவானி யாரிடம் பேசினாலும் அதை முடிச்சுப்போட்டு போட்டியாளர்கள் பேசுவது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. நேற்று வெளியான ப்ரோமோ ஒன்றில் தன்னை அபிநய்யிடம் பேசவது குறித்து கேட்க யாருக்கும் ரைட்ஸ் கிடையாது என்று பாவனி பேசி இருந்தார்.

Sherin

இந்த ப்ரோமோ வெளியானத்தில் இருந்தே பாவணிக்கு ஆதரவு குவிந்து வருகிறது. இந்த நிலையில் சீசன் 3 போட்டியாளர் ஷெரின், பாவனிக்கு அதராவாக பதிவிட்டுள்ளார். அதில் ”பாவனி உனக்காக நீ நின்று, ஒருவரின் நடத்தையை பற்றி குறை கூறும் இந்த ட்ரெண்டற்கு ஒரு முடிவு கட்டு” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

ஷெரின், பிக் பாஸில் இருந்த போது இவரையும் தர்ஷனையும் இணைத்து பலர் பேசினர். அதிலும் ஒரு எபிசோடடில் வனிதா ,என் கண்ணுக்கு முன்னாடி ஒரு affiar நடந்துட்டு இருக்கு (அதாவது கள்ளத்தொடர்பு ) என்று கூறியதால் கடுப்பான ஷெரின், என் உறவை பற்றி இப்படி பேச என் என்ன தைரியம். என்னை பற்றி பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை என்று

Advertisement