‘என்ன விஜய் குளுருதா, நான் வேனா வரட்டா’ – விவரம் தெரியாத வயதில் விஜய்யிடம் பிக் பாஸ் நடிகை எப்படி பேசியுள்ளார் பாருங்க.

0
702
vijay
- Advertisement -

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஷெரின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 கடந்த அக்டோபர் 6 வெற்றிகரமாக நிறைவடைந்தது. சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை ஷெரின். ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரை உலகிற்கு தனுசின் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.

-விளம்பரம்-
sherin

துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் நடிகை ஷெரின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். அழகான தோற்றம் இருந்த போதும் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .இதனால் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா படத்தில் ஐட்டம் டான்ஸராக களம் இறங்கினார்.அந்த படத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் தலை காண்பித்து வந்தார் ஷெரின்.

- Advertisement -

இறுதியாக நடித்த படம் :

இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அதனை வேறு எந்த திரைப்படத்திலும் காணமுடியவில்லை அதேபோல நடிகரின் பட வாய்ப்புகள் இல்லாததால் உடல் பருமனாக மாறி இருந்தார் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது மீண்டும் உடல் எடை குறைந்து இளமையான தோற்றத்துக்கு திரும்பினார் ஷெரின்.

வீடியோவில் 19 : 20 நிமிடத்தில் பார்க்கவும்

விஜய்யை பெயர் சொல்லி அழைத்த ஷெரின் :

இப்படி ஒரு நிலையில் நடிகை ஷெரின் , விஜய் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விஜய்யை சில கேள்விகள் கேட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் விஜயிடம் முழுவதும் ஆங்கிலத்தில் பேசும் ஷெரின், என்ன விஜய் குளுருதா நான் வேனா அங்க வரட்டா என்று முதிர்ச்சி இல்லாமல் கேட்டு இருக்கிறார். அதே போல விஜயிடம் சில கேள்விகளை கேட்கும் போது விஜயின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து கேட்கிறார்.

-விளம்பரம்-

பந்தா இல்லாமல் பதில் சொன்ன விஜய் :

அதற்கு நடிகர் விஜய் ஒரு நடிகனாக சினிமாவில் உடலை பிட்டாக வைத்துக் கொள்வது அவசியம் என்று கூறுகிறார். இந்த வீடியோவில் சின்ன பெண்ணாக இருக்கும் ஷெரின் விஜய் ஒரு மாபெரும் நடிகர் என்ற எண்ணம் இல்லாமல் விஜயிடம் மிகவும் சகஜமாக பேசி இருக்கிறார். அதே போல விஜய்யும் தான் ஒரு சீனியர் மற்றும் ஸ்டார் நடிகர் என்ற பந்தா இல்லாமல் ஷெரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

கொரோனாவால் அவதிப்பட்ட ஷெரின் :

நடிகை ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அதே போல டிவி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று எதிலும் காண முடியவில்லை. சமீபத்தில் கூட கொரோனா தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டார் ஷெரின். பின்னர் இரண்டு தடுப்பூசி செலுத்தியும் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பெரிதும் அவதிப்பட்டார் ஷெரின். மீண்டும் எப்போது ஷெரின் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் ஏங்கி கொண்டு இருக்கின்றனர்.

Advertisement