கடைசி இரண்டு இடத்துக்கு நடந்த கடும் போட்டி – இறுதியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா ?

0
267
bb
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் தான் விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கி தற்போது நான்காவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. அதோடு பலர் புது முகங்களாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

பின் வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் கடந்த வாரம் இரண்டாவது எவிக்சனில் அசல் வெளியேறி இருந்தார்.

நான்காவது வாரம் டாஸ்க்:

தற்போது நான்காவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இதில் அந்த டிவி – இந்த டிவி என்ற டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். வழக்கம்போல் இரு அணிகளுக்கும் இடையில் கலவரம் தொடங்கியிருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் விக்ரமன் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்திருக்கிறார். அதேபோல் அசீம் மீது விமர்சனங்கள் இருந்தாலும் கமல் கண்டித்த பிறகு அவருடைய நடவடிக்கையில் பல மாற்றங்கள் இருக்கிறது.

-விளம்பரம்-

நான்காம் வாரம் எவிக்ஷன்:

இதனால் அசீமும் கூடிய விரைவிலேயே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரை தொடர்ந்து தனலட்சுமி பல சர்ச்சைகளை சிக்கியிருந்தாலும் நல்ல பெயரை தான் எடுத்து வந்தார். ஆனால், இந்த வாரம் முழுக்க அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்திருக்கிறது. மேலும், இந்த வாரம் எவிக்ஷனில் அசீம், விக்ரமன், ஆயிஷா, ஷெரினா ஆகிய பெயர் இடம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போக இருக்கும் நபர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

வெளியேறிய நபர்:

விக்ரமன் அதிக வாக்குகள் எடுத்து முன்னிலையில் இருக்கிறார். விக்ரமனை அடுத்து அதிக வாக்குகள் அசீம்
பெற்று இருக்கிறார். பின் பொம்மை டாக்கில் பொய்யாக நாடகம் ஆடியதற்காக செரினாவும், கமலை எதிர்த்துப் பேசிய சர்ச்சையில் ஆயிஷாவும் குறைந்த வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் செரினா இந்த வாரம் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், பல்வேறு தனியார் வலைதள பக்கத்தில் கூட ஷெரினாவிற்கு தான் மிக குறைவான வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

Advertisement