தொடர்ந்து விதி மீறி வந்த ஷெரினா, இப்படி ஒரு வித்யாசமான Elimination Cardஐ காட்டி வெளியேற்றிய கமல். ஏன் தெரியுமா ?

0
616
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷெரினா, மிகவும் வித்யாசமான Elimination Cardஐ காட்டி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 4 வாரங்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வார நாமினேஷனின் விக்ரமன், அசீம், Vj கதிரவன், ஆயிஷா, ஷெரினா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் ஷெரினா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அதுவும் வித்யாசமான Elimination Card காண்பிக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல வித்திருமுறைகள் இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் வன்முரையில் ஈடுபடக்கூடாது, ஆபாசமாக பேசக்கூடாது, மைக்கை பாத்ரூம் செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கழட்ட கூடாது. இப்படி பல விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய விதியாக இருந்து வருவது போட்டியாளர்கள் யாரும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிகளிலும் உரையாடக்கூடாது.

- Advertisement -

அதற்கு முக்கிய காரணம் எந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்காக ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியாகும் இதனால் போட்டியாளர்கள் பேசிக்கொள்ளும்போது பெரும்பாலும் தமிழில் தான் பேச வேண்டும் என்பதுதான் முக்கிய விதியாக இருந்து வருகிறது.ஆனால், இந்த நிகழ்ச்சியில் தமிழ் பேசும் போட்டியாளர்களை தவிர பிற மொழி பேசும் போட்டியாளர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களையும் மீறி ஆங்கிலத்திலையோ அல்லது அவர்களின் தாய் மொழிகளிலேயோ பேசுவது வழக்கமான ஒரு விஷயம் தான்.

அப்படி தொடர்ந்து பேசும்போது அவர்களை பிக் பாஸ் நிச்சயம் எச்சரிப்பார். அதேபோல பிற மொழி பேசும் போது தமிழ் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவார்கள்.ஆயிஷா மற்றும் ஷெரினா இருவரும் மலையாளத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடலில் மற்ற போட்டியாளர்கள் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே தமிழில் பேச வேண்டும் என்று பிக் பாஸ் எச்சரித்து இருந்தார்.

-விளம்பரம்-

ஆனாலும், அடிக்கடி ஆயிஷா மற்றும் ஷெரினா இருவரும் மலையாளத்தில் பேசிக்கொண்டு தான் இருந்தனர். இதனை கடந்த வாரம் கமல் சுட்டி காட்டிய போது ‘இது தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அதனால் தமிழில் தான் பேச வேண்டும்’ என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று ஷெரினா வெளியேற்றப்பட்டத்தை அறிவிக்கும் போது கமல் காட்டிய Elimination Cardல் ஷெரினாவின் பெயர் மலையாளத்தில் இருந்தது.

பின்னர் மீண்டும் ஷெரினாவின் பெயர் தமிழில் எழுதப்பட்டு இருந்த Cardஐ காட்டி பங்கம் செய்துள்ளார் கமல். தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே Elimination Cardல் வேறு மொழி அச்சிடப்பட்டு காண்பிக்கபட்டு இருப்பது இதுவே முதல் முறை. இதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு இனி மற்ற போட்டியாளர்கள் யாரும் பிக் பாஸ் வீட்டில் தமிழை தவிர வேறு எந்த மொழியிலும் உரையாடக்கூடாது என்பதை நிச்சயம் உணர்ந்து இருப்பார்கள்.

Advertisement