‘என்னடா அவார்டா குடுக்குறாங்க’ – சீரியல் சீனையெல்லாம் போட்டு ஷெரினாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
401
sherina
- Advertisement -

சீரியல் சீனை எல்லாம் போட்டு பிக் பாஸ் ஷெரினாவை ரசிகர்கள் கலாய்த்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரம் தொடங்கி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பொம்மை டாஸ்க்:

இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து கடந்த வாரம் முதல் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். வழக்கம் போல் மூன்றாவது வாரம் தொடங்கி பிக் பாஸ் டாஸ்கை கொடுத்து இருக்கிறார். இந்த வாரம் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்கை கடந்த சீசனிலேயே பிக் பாஸ் கொடுத்து இருந்தார். அப்போதே பலவிதமான கலவரங்கள் ஏற்பட்டிருந்தது. அதேபோல் இந்த சீசனிலும் பொம்மை டாஸ்க் கொடுத்தவுடன் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி இருக்கிறது.

ஷெரினா- தனலட்சுமி சர்ச்சை:

இதனால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டும், மோதியும் விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் ஷெரினா கீழே விழுந்து தலையில் அடிபட்டது என்று கூறியவுடன் ஆண் போட்டியாளர்கள் சிலர் ஷெரினாவை காப்பாற்ற போட்ட காட்சிகள் எல்லாம் வேற லெவலில் இருந்தது. இதற்கு காரணம் தனலட்சுமி தான் என்று அசீம், தனலட்சுமியை பயங்கரமாக திட்டி இருக்கிறார். சிலரும் தனலட்சுமி தான் இதற்கு காரணமாக இருப்பாரோ? என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், தனலட்சுமி ஓவியாவை போல குறும்படம் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

-விளம்பரம்-

ஷெரினா போட்ட ட்ராமா:

என் மீது தவறு இருந்தால் நான் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்று தெளிவாக பேசி இருந்தார்.
இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் ஷெரினா கீழே விழவில்லை என்றும் அவர் தலையில் அடிபடவில்லை, அவர் போட்டதெல்லாம் டிராமா என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நடன டாஸ்க்கில் கலந்து கொள்வதை தவிர்க்கவும் இதே போல செரினா ஒரு டிராமாவை போட்டு இருக்கிறார். இப்படி ஷெரினா பிற போட்டியாளர்களை ஏமாற்றி நடத்தி வருவதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வீடியோவாக ஷேர் செய்து இருக்கிறார்கள்.

ஷெரினாவை கலாய்க்கும் ரசிகர்கள்:

அந்த வீடியோவில், தனலட்சுமி பின்னாடி இருந்த ஜனனி தான் செரினாவை இழுத்து கீழே தள்ளினார் என்று ஒரு குரூப்பும்,ஷெரினாவின் பின்னாடி இருந்தவர்கள் புஷ் பண்ணியதால் எதிர்பாராத விதமாக ஷெரினா கீழே விழுந்து இருக்கிறார். ஆனால், அவர் தலையில் அடியே படவில்லை. அதற்குள்ளே ஷெரினா அடிபட்டது போல் மிகப்பெரிய ட்ராமா நடத்தி இருக்கிறார் என்று கூறி ஷெரினா ஒரு டிராமா குயின் என்றெல்லாம் கிண்டல் செய்து வருகிறார்கள்.

அதிலும் சிலர், சீரியல் சீன்களை மிஞ்சும் அளவிற்கு ஷெரினா நடித்திருக்கிறார் என்றும் கலாய்த்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வார இறுதியில் கமல்ஹாசன் இது குறித்து என்ன சொல்லப் போகிறார்? என்று எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Advertisement