பாலாஜி முருகதாஸுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ள ஷிவானி – Unseen வீடியோ இதோ.

0
1381
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆம் தேதி துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் கொஞ்சம் போராக சென்று கொண்டு இருந்தது. ஆனால், கடந்த சில திங்களாக கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஆரம்பத்தில் அனிதா மற்றும் சுரேஷ் பிரச்சனையை மட்டும் அரைத்து கொண்டு இருந்த பிக் பாஸ் தற்போது தான் போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் நாரதர் வேலையை துவங்கி இருக்கிறார். அதுவும் Eviction Free Pass டாஸ்க்கின் போது சுரேஷ், போட்டியாளர்களை பற்றி பேசியதை அப்படியே அகம் டிவியில் போட்டு காண்பித்து சிண்டு முடிந்துவிட்டார். இதனால் சுரேஷுக்கு மற்ற சில போட்டியாளர்களுக்கு கொஞ்சம் வாக்கு வாதம் துவங்கியது.

நேற்றைய நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு இரண்டு குழுக்களாக பிரிந்து டாஸ்க் ஒன்றை செய்த்தனர். இதில் வெற்றி பெரும் ஒரு நபர், அவரும் அவரது பார்ட்னரும் அடுத்த வாரம் நடைபெறும் ஏவிக்ஷன் பிராசஸ்சில் பங்கேற்க மாட்டார்கள் என்று சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கில் ஜோடியாக இருந்த வேல் முருகன் மற்றும் சனம் ஷெட்டி இருவரும் வெற்றி பெற்றனர். இதனால் இவர்கள் இருவரையும் அடுத்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது.

- Advertisement -

ஆரம்பித்து பத்து நாட்கள் ஆன நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு fun -னான விஷயம் இல்லை என்று போட்டியாளர்களும் சரி பார்வையாளர்களும் சரி கொஞ்சம் சோகத்தில் இருந்து வந்த நிலையில் நேற்று ஆடல் பாடல் நிகழ்ச்சி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.இதில் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் ஜோடி ஜோடியாக ஆட்டம் போட்டனர். அதிலும் இது நாள் வரை எலியும் பூனையுமாக இருந்த அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் இருவரும் இணைந்து சின்ன மச்சான் பாடலுக்கு குத்தாட்டம் போட்டது வேற ரகத்தில் இருந்தது. அதேபோல மற்ற போட்டியாளர்களை ஆட்டமும் ரசிக்கும்படியாக இருந்தது.

ஆனால் இளசுகள் ஆவலுடன் எதிர்பார்த்த ஷிவானி யாருடன் ஆடுவார் என்பதை நேற்று காண்பிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் தற்போது Unseen வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் சிவானி பாலாஜி முருகதாஸ் உடன் இணைந்து செல்லம்மா பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் இந்த பகுதி என்று ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement