விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வந்தது.
பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.
இதையும் பாருங்க : தான் கால்ஷீட் ஒதுக்கி இருந்த படம் – சமந்தாவிற்கே விபூதி அடித்துள்ள நயன்தாரா. செய்வதரியாது நின்றுள்ள சமந்தா.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே அவர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்பு வந்துவிடும். இப்படி ஒரு நிலையில் ஷிவானிக்கும் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதுவும் முதல் படத்திலேயே கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. நடிகர் கமல் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இருப்பினும் அம்மனி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை மட்டும் தவறாமல் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் உடைமாற்றும் அறையில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதை பார்த்த பலரும் உடை மாற்றும் அறைக்குள் எப்படி கேமராமேன் வந்தார் என்று கேலி செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.