தான் கால்ஷீட் ஒதுக்கி இருந்த படம் – சமந்தாவிற்கே விபூதி அடித்துள்ள நயன்தாரா. செய்வதரியாது நின்றுள்ள சமந்தா.

0
423
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. சமீபத்தில் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவும் இடையே விவாகரத்து ஏற்பட்ட விவகாரம் குறித்து சோசியல் மீடியாவில் பல கருத்துக்களும் சர்ச்சைகளும் எழுந்து இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், பிரிவிற்கு பின் சமந்தா பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமந்தா நடிக்க இருந்த படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக சமந்தா, நயன்தாரா இருவருமே திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமில்லாமல் இருவரும் நல்ல தோழிகளும் ஆவர். விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக போய் கொண்டு இருக்கிறது. மேலும், டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஹாரர் திரில்லர் படம் தான் கேம் ஓவர்.

இதையும் பாருங்க : பத்திரிக்கையாளர்களை பார்த்ததும் மாடல் அழகி போல நடந்த மகள், கடுப்பான ஐஸ்வர்யா ராய். வைரல் வீடியோ.

- Advertisement -

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி இருந்தார். இது இவருடைய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை தொடர்ந்து அஸ்வின் சரவணன் சமந்தாவை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தார். இதற்காக அவர் சமந்தாவிடம் கால்ஷீட் கேட்டு இருந்தாராம். அதற்கு சமந்தாவும் கால்ஷீட்டை ஒதுக்கி தந்திருக்கிறாராம். இந்நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன் கனெக்ட் என்ற படத்தின் விளம்பரம் வெளியாகி இருந்தது. இதில் நயன்தாரா நடிப்பதாகவும், அஸ்வின் சரவணன் இயக்க இருப்பதாகவும், விக்னேஷ் சிவன் தயாரிப்பதாகவும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இது சமந்தாவுக்கு மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஏனென்றால், இந்த படத்தை பற்றி சமந்தாவிடம் எதுவும் சொல்லாமல் அஸ்வின் இருந்ததாகவும், சமந்தாவுக்கு சொன்ன கதையை தான் நயன்தாராவை வைத்து எடுப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக கனெக்ட் பட குழுவினர் கூறியது, சமந்தாவிற்கும், நயன்தாராவுக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. படத்தின் வேலைகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடங்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement