பிக்பாஸ் ஷிவானியின் கேரவனுக்குள் ரசிகர் புகுந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்க்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை உருவாக்கி வருகிறார்கள். அதிலும் சமீப காலமாக வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத் திரை நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ஷிவானி நாராயணன்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். ஆனால், அதற்கு முன் சிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பிறகு பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் சேனலில் இரட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும், இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.
ஷிவானியின் இன்ஸ்டாகிராம்:
நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத் தான் இருந்து வந்தது. இதனால் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சத்துக்கும் மேல் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்த பிரபலத்தின் மூலம் தான் இவருக்கு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. இதனால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி:
ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஷிவானி தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தார். பின் இவர் ரீல்ஸ் வீடியோ, போட்டோ என எதையாவது ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே அவர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்பு வந்துவிடும்.
ஷிவானி நடிக்கும் படங்கள்:
இப்படி ஒரு நிலையில் ஷிவானிக்கும் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதுவும் முதல் படத்திலேயே கமல் உடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. நடிகர் கமல் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் விக்ரம். விஜய் சேதுபதியின் படம், பொன்ராம் இயக்கும் படம், நடிகர் வடிவேல் கம்பேக் கொடுக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ், ஆர்கே பாலாஜியின் படம் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து சிவானி நடித்து வருகிறார்.
ரசிகர் செய்த செயல்:
இந்த நிலையில் சிவானி கேரவனுக்குள் ரசிகர் ஒருவர் புகுந்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சிவானியின் கேரவனுக்குள் ரசிகர் ஒருவர் சென்று சிவானி உடைய புகைப்படத்தை அவருக்கு பரிசளித்துள்ளார். அதோடு அந்த பரிசில் எழுதி இருந்த கதையை அப்படியே பாட்டாக பாடி நடிகை ஷிவானி நாராயணனை வர்ணித்துள்ளார் அந்த ரசிகர். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.