சமீப காலமாக வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத் திரை நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ஷிவானி நாராயணன்.இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் சேனலில் இரட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும், இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம். இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு காதல் கதை இடம் பெற்றுவிடும் முதல் சீசனில் ஓவியா -ஆரவ் இரண்டாவது சீசனில் மகத் மற்றும் யாஷிகா மூன்றாவது சீஸனில் அபிராமி – முகேன், கவின்- லாஸ்லியா, தர்ஷன்- ஷெரின் என்று பல காதல் கதைகள் ஓடியது. அதே போல தான் இந்த சீசன் ஆரம்பத்தில் பாலாஜி மற்றும் கேபி இருவருக்கும் காதல் இருப்பது போல காண்பிக்கப்பட்டது. ஆனால், அது எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. மேலும், ஷிவானி – பாலா காதல் கதையும் ஒர்க் அவுட் ஆகவில்லை.
பிக் பாஸ் வீட்டில் ஷிவானி அம்மா :
அதிலும் ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே வந்தே போது ஷிவானிக்கு அவர் விட்ட டோஸை பார்த்து இனிமேல் ஷிவானி, பாலாஜி பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டார் என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அதன் பின்னரும் பாலாஜியிடம் சகஜமாக தான் பேசி வந்தார் ஷிவானி. சமீபத்தில் கூட தனது நாய் குட்டிக்கு பிறந்தநாளை கொண்டாடிஇருந்தார். இந்த கொண்டாட்டத்தில் பாலாஜி, சம்யுக்தா, ஆஜீத் ஆகியோரும் கலந்துகொண்டு இருந்தனர்.
தொடரும் நட்பு :
அதுமட்டுமல்லால் ஷிவானியின் அம்மா தோள் மீது பாலாஜி கைபோட்டு கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியது. அதில் பாலாஜியின் கண்ணாடியை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள ஷிவானியின் அம்மாவை பார்த்த ரசிகர்கள், பாலாஜி கிட்ட பேசாதன்னு பிக் பாஸ்ல ஷிவானிய திட்னது எல்லாம் நடிப்பா என்று கமன்ட் செய்து வந்தனர். அதே போல பிக் பாஸ் ஜோடியில் கூட பாலாஜி – ஷிவானி ஒன்றாக நடனமாடி இருந்தனர்.
ஷிவானி பிறந்தநாள் :
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பாலாஜி பிறந்தநாளில் ஷிவானி கலந்துகொண்டு இருந்தார். இப்படி பாலாஜி – ஷிவானி உறவு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இன்று ஷிவானி தனது 22வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இந்த பிறந்தநாள் கொண்டாடத்திலும் பாலாஜி கலந்துகொண்டி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஷிவானி நடித்து வரும் படங்கள் :
அந்த புகைப்படத்தில் ஷிவானியின் அம்மா பாப் கட் செய்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஷிவானி பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதிலும் குறிப்பாக முதல் படத்திலேயே கமல் உடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஒரு படம் வடிவேலுவின் கம் பேக் படமாக அமைந்து இருக்கும் நாய் சேகர் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் ஷிவானி.