‘இன்னும் ஒரு படம் கூட வரல’ – வடிவேலு ரசிகர்களை டென்ஷனாக்கிய பிக் பாஸ் நடிகை. என்ன காரணம் பாருங்க.

0
634
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி. ஆனால், இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஹூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம். சமீப காலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத் தான் இருந்து வந்தது. அதோடு இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சத்துக்கும் மேல் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்த பிரபலத்தின் மூலம் இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-
shivani

இதனால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும், ஷிவானிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்ததற்கு காரணம் அவருடைய 4 மணி புகைப்படங்கள் தான். ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஷிவானி தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தார்.

- Advertisement -

ஷிவானியின் புகைப்படங்கள்:

கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார் ஷிவானி. சமீபத்தில் சிவானி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கே நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த 4 வலைத்தளத்தில் ரசிகர்கள் கொஞ்சம் குஷியில் இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே அவர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்பு வந்துவிடும். இப்படி ஒரு நிலையில் ஷிவானிக்கும் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

shivani

ஷிவானி நடிக்கும் படங்கள்:

அதுவும் முதல் படத்திலேயே கமல் உடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. நடிகர் கமல் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் விக்ரம். இந்த படத்தில் ஒரு டான்ஸுக்கு ஷிவானி ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் படத்திலும் சிவானிக்கு நடிக்க வாய்ப்பு வந்து இருக்கிறது. அதனை தொடர்ந்து பொன்ராம் இயக்கும் படத்திலும் ஷிவானி நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இவர் நடிகர் வடிவேல் கம்பேக் கொடுக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திலும் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது.

-விளம்பரம்-

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் ஷிவானி:

இந்த படத்தில் சிவானியின் கதாபாத்திரம் பற்றி சோசியல் மீடியாவில் பல்வேறு வதந்திகள் வந்தது. அதுவும் இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கிறார் என்றெல்லாம் சொல்லி இருந்தார்கள். ஆனால், படக்குழு கிடையாது என்று சொல்லியது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க சிவானி கிளாமர் உடன் வலம் வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவானி தரப்பு ரசிகர்கள் பலரும் இது குறித்து பல்வேறு கமெண்ட்டுகளை போட்டிருக்கிறார்கள். அதில், இந்த படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் காலியாக கிடைக்கிற கவர்ச்சி நடிகைக்காண இடம் சிவானிக்கு தான் கிடைக்கப்போகிறது. பழைய சில்க் மாறி சிவானி ஒரு ரவுண்டு வரப்போகிறார்.

ஷிவானியை விமர்சித்த ரசிகர்கள்:

அதோடு இந்த படத்தை வடிவேலுக்காக பார்க்கிறார்களோ? இல்லையோ? ஷிவானிக்காக படத்தை நிச்சயம் பார்ப்பார்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டிருந்தார்கள். இதை பார்த்த வடிவேலுவின் ரசிகர்கள் பலரும் கொந்தளித்துப் போய் ஷிவானியை வறுத்து எடுத்து வருகிறார்கள். நீண்ட வருடங்களுக்கு பிறகு வடிவேலின் வருகைக்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் ஷிவானியின் ரசிகர்கள் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதற்கு சிவானி தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement