என்னங்கடா, WWE ரேஞ்சுக்கு இருக்கு – ஷிவின் தனலட்சுமிக்கு இடையை நடந்த சம்பவம். வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

0
221
dhana
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் தனலட்சுமி மற்றும் ஷிவின் இருவரும் டாஸ்க் என்ற பெயரில் அடித்து மாஞ்சி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அனைவரும் காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கி 52 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த வாரம் அசீம் கேப்டன் பதவியை வென்றார். அசீம் கேப்டன் ஆன உடனே பல அதிரடி மாற்றங்கள் செய்து இருந்தார்.இது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டது. பின் வழக்கம் போல் பிக் பாஸ் இந்த வாரம் டாஸ்க் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது, பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சீசனில் இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான சண்டைகள் ஏற்பட்டிருந்தது.

- Advertisement -

தற்போது அதை தான் பிக் பாஸ் எதிர்பார்த்து இந்த முறை கொடுத்து இருக்கிறார். பழங்குடியினரிடம் இருக்கும் செல்வத்தை ஏலியன்கள் திருட வேண்டும். ஏலியன்கள், பழங்குடியினரை எப்படி வேண்டுமானாலும் கோபப்படுத்தலாம் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.இதனால் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டதிலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான வாக்குவாதம் சென்று கொண்டிருக்கின்றது.

நேற்றைய எபிசோடில் அசீம் – அமுதவாணன் பயங்கரமாக சண்டை போட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. இதில் அசீம் அமுதவானனை கன்னத்தில் கை வைத்து லேசாக தட்ட உடனே என்னை அடித்துவிட்டார் என்று அமுதவானன் புலம்ப துவங்கிவிட்டார். இதனால் மற்ற போட்டியாளர் எல்லாம் அஸீமிற்கு எதிராக ஒன்று செய்து அவரை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இன்றைய எபிசோடில் ஷிவின் மற்றும் தனலட்சுமி அடித்து மாஞ்சிகொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இன்றைய லைவ் எபிசோடில் தனலட்சுமி மற்றும் ஷிவின் இருவரும் ஒரு சிறிய டாஸ்க்கிற்காக ஆட ஆரம்பித்தனர். இந்த டாஸ்க் கொஞ்சம் கொஞ்சமாக சீரிஸ்ஸாக மாற இருவரும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தள்ளிவிடுவது, முடியை பிடித்து இழுப்பது என்று சண்டையிடும் அளவு சென்றுவிட்டனர்.

அதிலும் சண்டை என்று வந்துவிட்டால் தனலட்சுமியை சொல்லவா வேண்டும் ஷிவினை பாடாதபாடு படுத்திவிட்டார். ஆனாலும் ஷிவின் அவருக்கு தொடர்ந்து tough கொடுத்து வந்தார். முதலில் இவர்கள் இருவரும் ஹாலில் சண்டை போட்டு கொண்டு இருக்க ஒருகட்டத்தில் நீச்சல் குளத்தில் எல்லாம் இறங்கி சண்டை போட ஆரம்பித்துவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை கண்ட பலரும் தனலட்சுமியை தான் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஏனென்றால் தனலட்சுமி தான் சிவினை அடிக்கடி ஆக்ரோஷமாக தள்ளிக் கொண்டே இருந்தார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் இதுவே அசீம் செய்திருந்தால் என்னவாகி இருக்கும். பொம்மை டாஸ்க்கில் அசீம் தன்னை லேசாக தள்ளியதற்கு தனலட்சுமி என்னவெல்லாம் சொன்னார், அப்போது இதெல்லாம் கணக்கில் வராதா என்ன ? என்று தனலட்சுமியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்

Advertisement