மாரடைப்பால் காலமான பிக் பாஸ் பிரபலத்திற்கு பதிலாக தனக்கு RIP போட்ட நபர் – கடுப்பான சித்தார்த்.

0
3221
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். சமீபத்தில் நடிகர் சித்தார்த் தமிழில் நடித்திருந்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சமூக வளைத்தளத்திலும் ட்ரெண்டிங்கான நபர் தான்.

-விளம்பரம்-
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் - கடுப்பான சித்தார்த்

மேலும், இவர் சமூக வலைத்தளங்களில் அரசியல் ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் பல கருத்துகளை கூறி பலமுறை பல சிக்கலில் சிக்கி உள்ளார். இது குறித்து இவர் மீது பல விமர்சனங்கள் வந்துள்ளது. பொதுவாகவே நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்துவிடுவார். இந்த நிலையில் சித்தார்த் இறந்துவிட்டதாக சோசியல் மீடியாவில் சித்தார்த் புகைப்படம் வெளியாகி உள்ளது.

- Advertisement -

தற்போது அதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சித்தார்த் அதை பதிவிட்டு குறிப்பிட்டு அவர்களின் வெறுப்பு மற்றும் தொல்லை. இதில் நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ட்விட் வைரலாகி வருகிறது. இதை பார்த்த சிலரோ இது தவறுதலாக நடந்திருக்கும் என்று கூறி வருகின்றனர். உண்மையில் ஹிந்தியில் பிக்பாஸ் 13 போட்டியில் வெற்றியாளரான சித்தார்த் சுக்லா என்பவர் தான் காலமானார்.

சித்தார்த்

இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். ஹிந்தி பிக் பாஸ் 13இல் வெற்றியாளரும் ஆவார். ஆனால், தற்போது அவருக்கு 40 வயது தான் ஆகிறது. இவர் நேற்று காலை மாரடைப்பால் மும்பையில் காலமானார். இவரின் மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்கு பதிலாக நடிகர் சித்தார்த்தின் படத்தை மாற்றி வைத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement