இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது இவர்கள் தான்.! செம போட்டி இருக்கு போங்க.!

0
7011
losliya

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது.

losliya

கடந்த வாரம் இந்த வார தலைவர் பதவிக்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மதுமிதா, தாண்டி, முகென் கலந்துகொண்டனர். அந்த போட்டியில் வெற்றி பெற்ற மகன் இந்த வார தலைவராக இருந்து வருகிறார். அதனால் அவரை போட்டியாளர்கள் யாரும் நாமினேட் செய்ய இயலாது.

இதையும் பாருங்க : ரேஷ்மா வெளியேற்றப்பட்டு சாக்க்ஷி காப்பாற்றப்பட்டதற்கு இது தான் காரணமா.!

- Advertisement -

அதேபோல கடந்த வாரம் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டு ரகசிய அருகில் வைக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா வெளியேறுது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் இன்று நாமினேஷன் நடைபெற இருக்கிறது.

இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்கள் :

-விளம்பரம்-
  • லாஸ்லியா
  • அபிராமி
  • சாக்க்ஷி

இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் லாஸ்லியா தான் பெரும்பாலானோர் நாமினேட் செய்தனர். அதே போல லாஸ்லியா, சாக்க்ஷியை நாமினேட் செய்திருந்தார். என்வே, இந்த வாரம் எலிமினேஷன் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஒரு வேலை இந்த வாரம் சீக்ரெட் ரூம் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement