அடுக்கடுக்காக சிகிரெட்..! முதல் முறையாக காட்டப்பட்ட “Smoking Room” ரகசியங்கள்.!

0
1407
- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிச்சும் இந்த வாரம் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. போட்டியாளர்கள் செய்து வரும் பல அத்துமீறிய செயல்களால் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி மீதான அபிமானம் சற்று குறைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை வெளிவராத புதிய சர்ச்சையான விடயம் ஒன்று தற்போது ஆதாரத்துடன் கிடைக்கப்பெற்றுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஸ்மோக்கிங் அறைக்கு சென்று புகைப்பிடிகின்றனர் என்பது தெரியும். அதில் மஹத் தான் ஸ்மோக்கிங் அறைக்கு தொடர் வாடிக்கையாளராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

smoking-room

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் 30 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டில் குளியலறையிளும் ஸ்மோக்கிங் ரூம் எனப்படும் புகைபிடிக்கும் அறையில் மட்டும் தான் கேமரா கிடையாது என்று நினைத்து வருகிறோம். ஆனால்,ஸ்மோக்கிங் ரூம் வழியாக பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் நபர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் பேட்டி ஒன்றில் ரம்யா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்மோக்கிங் அறையின் முழு தோற்றமும் தெளிவாக தெரிந்தது. சமீபத்தில் பிக் பாஸில் கொடுக்கப்ட்ட ‘உன்னை போல் ஒருவன் ‘ டாஸ்கின் போது
மும்தாஜ் கதாபாத்திரத்தில் இருந்த மஹத், மும்தாஜின் உருவத்தை போன்றே இருக்க வேண்டும் என்பதற்காக தனது பின் இடுப்பிற்கு கீழே தலையணையை வைத்துக் கொண்டிருந்தார்.அந்த அறையில் அவருடன் ஐஸ்வர்யா, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த அறையில் அடுக்கடுக்காக பல்வேறு விதமான சிகரெட் பெட்டிகளும். ஒரு மண் குவிக்கப்பெற்ற தூணில், சிகரேட் சாம்பல் குவியல்களும் காணப்பட்டது. அதே போல அந்த அறையில் நின்று கொண்டிருந்த யாஷிகாவின் கையிலும் சிகரெட் பெட்டியை வைத்திருந்தார்.

-விளம்பரம்-

Smoking-Area

இத்தனை நாட்கள் போட்டியாளர்கள் சிலர் பிக் பாஸ் வீட்டில் புகைபிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் அந்த விடயத்திற்கு ஆதாரம் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள இந்த புகைப்படம் மூலம் போட்டியாளர்களுக்கு அடுக்கடுக்காக சிகரெட் பெட்டிகள் வழங்கப்படுகிது என்று மட்டும் தெளிவாக தெறிகிறது.

அதே போல இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 சீசன்களுக்கு மேல் கடந்து சென்றுள்ளது. ஆனால், இந்தி பிக் பாஸில் ஒரு சில போட்டியாளர்கள் புகைபிடிப்பதை தொலைக்காட்சிகளிலே ஒளிபரப்பினர். ஆனால், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் புகைப்பிடிப்பதை காண்பித்தால் மக்கள் மத்தியில் இருந்து பல வகையான எதிர்ப்புகள் எழும் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் காட்சிகளை ஒளிபரப்புவதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

Advertisement