காவல் நிலையத்தில் தினமும் பிக் பாஸ் சினேகன் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் போட்ட உத்தரவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சில மாதங்களாக சினேகன்- ஜெயலட்சுமி விவகாரம் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, தன்னுடைய பெயரை சொல்லி மோசடி நடப்பதாக சினேகன் அவர்கள் நடிகை ஜெயலட்சுமி மீது புகார் அளித்து இருந்தார். சினேகன் 2015ஆம் ஆண்டில் இருந்து சினேகம் பவுண்டேஷன் நடத்தி வருகிறார். இது அவரின் சொந்தப் பணத்தின் மூலம் உருவாக்கியது. இதன் மூலம் இவர் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
அதற்கு இவர் முறையாக வருமான வரி செலுத்தி வருவதாகவும், அதற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தன்னுடைய பெயரை பயன்படுத்தி பணம் மோசடி செய்வதாக நடிகை ஜெயலட்சுமி மீது கமிஷன் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் சினேகன். இதனை அடுத்து நடிகை ஜெயலட்சுமி கூறியது, நான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலில் சினேகம் அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். அதன் மூலம் மக்களுக்கு உணவு, உடை உட்பட பல்வேறு சேவைகளை செய்து இருக்கிறேன்.
ஜெயலட்சுமி அளித்த புகார்:
கொரோனா காலத்திலும் மக்களுக்கு என்னுடைய சினேகம் அறக்கட்டளை மூலம் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன். ஆனால், சினேகன் அவர் பெயரை நான் தவறாக பயன்படுத்தி பொதுமக்களை தனியாக சந்தித்து பணம் பறிப்பதாக புகார் அளித்திருக்கிறார். இது முற்றிலும் பொய். என் பெயரை களங்கப்படுத்துவதற்காக அவர் இந்தக் குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினேகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
சைபர் கிரைம் போலீசார் விசாரணை :
இப்படி இருவரும் மாறி மாறி புகார் அளித்தும், பேட்டி கொடுத்தும் இருந்தார்கள். இதன் பின் சினேகன் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? என்று மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தது. அதன் பின் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால், சிநேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
முன் ஜாமின் பெற்ற சினேகன் :
பின் நடிகை ஜெயலட்சுமி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் அளித்து இருந்தார். அதில் ஸ்நேகனை நான் சும்மா விட மாட்டேன் என்றும் கூறி இருந்தார். மேலும், தன் மீது அவதூறு பரப்பும் சினேகன் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்றும் ஜெயலட்சுமி கூறி இருந்தார். இதனை அடுத்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் தன்னை கைது செய்யக்கூடாது என்று சினேகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
நிபந்தனை ஜாமின் :
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சினேகனுக்கு முன்ஜாமின் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இந்த வழக்கின் மறு உத்தரவு வரும் வரை சினேகன் திருமங்கலம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து வேண்டும் என்றும் உத்தரவு தெரிவித்து இருக்கிறது. அதோடு சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் சினேகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.