ஐஸ்வர்யாவிடம் தன் சித்து விளையாட்டை காட்டிய சினேகன்..! என்ன பண்ணார் தெரியுமா..?

0
433
Snehan

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களான சினேகன், ஆர்த்தி, சுஜா, காயத்ரி,வையாபுரி ஆகியோர் விருந்தினராக வந்துள்ளனர். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 13) சீசன் 1 ன் வெற்றியளரான ஆராவ்வும் வந்துள்ளார். இவர்கள் அனைவரும் இந்த வார இறுதி வரை இருப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மற்றும் ஸ்நேகனுக்கு இடையே ஒரு ரொமான்ஸ் ஓடியுள்ளது.

Bigg-boss

- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியில் சினேகன் சமயல் செய்து கொண்திருந்த போது அதனை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா, உங்களுக்கு வர போர வைப் ரொம்ப லக்கி என்று கூறுகிறார். அதற்கு ஆர்த்தி அநேகமா இந்த சீசன்ல உங்களுக்கு கிடைக்கும்னு நினைக்கிற.உங்க ரீ-என்ட்ரியோட டாஸ்கே அது தானானோனு தோணுது எனக்கு என்கிறார்.அதற்கு ஐவர்யாவை, ஓ உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகளையா என்று கூறுகிறார். பின்னர் ஆரத்தி, ஓ..அப்போ வாய்ப்பு இருக்கு என்று கூறுகிறார். இதனை பார்த்துக் கொண்டிருந்த வையாபுரியும், ஆமாம் நேத்து கவிதை கூட ஐஸ்வர்யாகிட்ட சொல்லிட்டாரு இன்னிக்கி காலைல பூ கூட கொடுத்துட்டாரு என்றதும் ஸ்நேகனுக்கு வெக்கம் தாங்க முடியவில்லை.

ஐஸ்வர்யா மற்றும் ஸ்நேகனுக்கு இடையே ஏதோ ரொமான்ஸ் ஓடுவது போல அனைவரும் நேற்று பேசியதும் ஸ்நேகனுக்கு தலைகால் புரியவில்லை. அதன் பின்னர் ஐஸ்வர்யா மாற்றும் சினேகன் இருவரும் காதலை சொல்லிக்கொள்வது போல ஒரு டிராமா செய்ய வேண்டும் என்று போட்டியர்கள் கூற, இருவரும் கை கோர்த்து டூயட் பாடினர்.அப்போது சினேகன், ஐஸ்வர்யாவை தூக்கி நடனமாடினார்.இதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் அனைவருமே சிரித்துக் கொண்டிருந்தனர்.

-விளம்பரம்-

Sinegan

bigg-boss-aishwarya

Aishwarya

கடந்த சீசனில் சினேகன் பங்குபெற்று இருந்த போது, தான் எப்போதும் தேவதைகளுடன் இருப்பேன் எனக்கு எத்தனை கேர்ள் பிரண்ட்ஸ் இருக்கிறார்கள் தெரியுமா என்று கூறியிருந்தார். அதே போல ஸ்நேகனின் தந்தை பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்த போது கூட இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சி பாக்கணும்னு ஆசை என்று கூறியிருந்தார். தற்போது ஆர்த்தியும்,சினேகன் திருமணம் செய்துகொள்ளத்தான் சினேகன் இந்த சீசனில் பங்கு பெற்றுள்ளார் என்று கூறியுள்ளதை வைத்து பார்க்கும் போது விரைவில் ஸ்நேகனுக்கு திருமணம் நடந்து விடுமோ என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

Advertisement