திருமணத்திற்கு வர முடியாததால் சினேகனை நேரில் அழைத்து இசையானி கொடுத்துள்ள பரிசு – என்ன கொடுத்துள்ளார் பாருங்க.

0
3374
snegan
- Advertisement -

பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன் சினேகனுக்கு கன்னிகா என்ற நடிகையுடன் திருமணம் நடைபெற்றது. நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தொடரில் நடித்துள்ளார்.இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையும் பாருங்க : பலரின் கவனத்தை ஈர்த்த ‘பில்டர் கோல்ட்’ எப்படி இருக்கிறது – முழு விமர்சனம் இதோ.

- Advertisement -

இந்த நிலையில் இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் படு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டது. சினேகன், திருமணம் செய்துள்ள கன்னிகா சமுத்திரகனியின் அடுத்த சாட்டை படத்தில் கூட நடித்துள்ளார்.

சினேகனின் திருமணத்தில் பல்வேரு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படி ஒரு நிலையில் சினேகனின் திருமணத்திற்கு வர முடியாத இளையராஜா, சினேகன் – கன்னிகா தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்ததோட அவர்களுக்கு ஒரு தங்க மோதிரத்தையும் கல்யாண பரிசாக அளித்துள்ளார். அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சினேகா.

-விளம்பரம்-
Advertisement