பலரின் கவனத்தை ஈர்த்த ‘பில்டர் கோல்ட்’ எப்படி இருக்கிறது – முழு விமர்சனம் இதோ.

0
2055
- Advertisement -

இயக்குனர் விஜயபாஸ்கர் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் பில்டர் கோல்ட். இந்த படத்தில் விஜய் பாஸ்கரே ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகி யாரும் இல்லை. இந்த படத்திற்கு ஹூமர் எழிலன் இசை அமைத்துள்ளார். பரணி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். திருநங்கைகள் வாழ்கை குறித்த கதை தான் பில்டர் கோல்ட். இந்த படத்தின் விமர்சனத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

படத்தில் திருநங்கைகள் விஜி, சாந்தி, டோரா ஆகிய 3 பேரும் நண்பர்களாக பழகி வருகிறார்கள். இவர்களில் விஜி மிகவும் தைரியமானவர். கொலைக்கு அஞ்சாதவர். திருநங்கைகளுக்கு ஒரு அவமானம் என்றால் அவர்களுக்கு முன்னால் நின்று தண்டனை கொடுக்கும் நபர். தச்சுத் தொழில் நடத்தும் ஒருவர் கொடுக்கும் கூலிக்கு விஜி வேலை செய்து வருகிறார். பின் விஜி தன் முதலாளி சொல்லும் நபர்களை கொலை செய்து வருகிறார். கடைசியில் விஜி செய்யும் கொலையால் என்னெல்லாம் திருநங்கைகளுக்கு பிரச்சனை வருகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

விஜி கதாபாத்திரத்தில் நடிகர் விஜயபாஸ்கர் நடித்துள்ளார். முரட்டு சுபாவம், சக தோழிகள் மீது அவர் காட்டும் பாசம், தங்கள் இனத்தை சார்ந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முன்னால் நின்று குரல் கொடுப்பது, அடிதடி என்று அவருடைய பாத்திரம் அமைந்துள்ளது. டோரா, சாந்தி இருவருமே படத்தில் உண்மையாகவே கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். மரக்கட்டை முதலாளியாக வரும் சிவ இளங்கோ தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

முதல் முறையாக தமிழ் சினிமாவில் திருநங்கைகளைப் பற்றி இவ்வளவு விரிவான வெளிப்படையான படம் என்றால் அது பில்டர் கோல்ட் தான். சமூகத்தில் திருநங்கைகளை புறக்கணிக்கும் மனிதர்கள் மீது ஏற்படும் கோபம், அவர்களால் கிடைக்கும் அவமானம் என்று அனைத்தையும் இயக்குனர் படத்தில் காண்பித்துள்ளார். படத்தில் நடிகர் விஜயபாஸ்கர் உண்மையாலுமே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு இடத்தில் திருநங்கைகள் தன் குடும்பத்தாலும், நாட்டில் பிற மனிதர்களால் ஏற்படும் துன்பங்களையும் துயரங்களையும் அழகாக உணர்வுபூர்வமாக காட்டியுள்ளார் இயக்குனர். ஒட்டுமொத்தத்தில் திருநங்கைகளின் வாழ்வியலை தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஆனால், படத்தில் திருநங்கைகள் நிஜ வாழ்க்கையில் பேசுவது போலவே கொச்சையாக பேசி இருப்பதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். திருநங்கைகளைப் பற்றி மட்டுமே கதைக்களம் கொண்டு சென்றதால் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் மக்களுக்கு புரியும் வகையில் தெளிவாக எடுத்து கொண்டு சென்று இருக்கலாம். படத்தில் சில குறைகள் இருந்தாலும் திருநங்கைகள் வாழ்க்கையை பற்றி இயக்குனர் விஜயபாஸ்கர் கூறியிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படத்தின் ஒளிப்பதிவும், இசையும் சிறப்பு.

பிளஸ்:

படத்தில் நடிகர் விஜயபாஸ்கர் நடிப்பு அற்புதம்.

படத்தில் பிற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கனகச்சிதமாக நடித்து இருக்கிறார்கள்.

முதல் முறையாக திருநங்கைகளின் வாழ்வியலைப் பற்றி வெளிவந்த படம்.

மைனஸ்:

படத்தில் அதிகம் கொச்சைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சில இடங்களில் பார்ப்போருக்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.

கதைகளம் இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்து கொண்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பில்டர் கோல்டு படம் சுமாராக இருந்தாலும் விஜயபாஸ்கரின் புதுமுயற்சி பாராட்டுக்குரிய வகையில் அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் பில்டர் கோல்ட் — திருநங்கைகளுக்கான உலகம்.

Advertisement