18 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக தாடி எடுத்த சினேகன், கன்னிகாவின் ரியாக்ஷன்

0
466
- Advertisement -

பல வருடங்களுக்கு பின் சினேகன் தாடி எடுத்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவருக்கான அடையாளமே அந்த தாடி தான். பெரும்பாலும் இவரை அனைவரும் தாடியில் தான் பார்த்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சினேகன் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

நடிகர் சினேகன் அவர்கள் சலூன் கடைக்கு சென்று கிளீன் சேவ் பண்ணி இருக்கிறார். 18 ஆண்டுகளுக்கு பிறகு சினேகன் முதன் முதலாக தாடி எடுத்து இருக்கிறார். இதை அவர் தன்னுடைய மனைவி கன்னிகாவுக்கு சர்ப்ரைஸ் செய்து இருக்கிறார். இதை பார்த்தவுடன் அவருடைய மனைவி ஷாக் ஆகி திட்டி இருக்கிறார். அதோடு அவருடன் செல்ல சண்டையும் போட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சினேகன் திரைப்பயணம்:

மேலும், சினேகன் அவர்கள் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. இவர் 2500 பாடலுக்கு மேல் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன்:

இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் என்று சொல்லலாம் . இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் கமலின் கட்சியில் இணைந்தார். இதனிடையே சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

சினேகன் – கன்னிகா திருமணம்:

இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சயாக நடந்து இருந்தது. கன்னிகாவும் நடிகை தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த ‘கல்யாண வீடு’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார். பின் இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் 10 வருடம் வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆழமாகக் காதலித்து தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர்.

சினேகன்- கன்னிகா தொழில்:

சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் படங்களில் பிசியாக இருக்கிறார். கன்னிகா யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இதில் அவர் தன் கணவருடன் இருக்கும் புகைப்படம், வீடியோ என்று அனைத்தையும் பகிர்ந்து வருவார். சமீபத்தில் கூட இவர் புதிய தொழிலை ஆரம்பித்திருப்பதாக அறிவித்து இருந்தார். இவர்கள் ‘சினேகன் ஹெர்ப்ஸ்’ என்ற பெயரில் ஹெர்ப் ஹேர் ஆயில் என்ற பிராண்ட் எண்ணையை உருவாக்கும் தொழிலை தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

Advertisement