சீரியல் நடிகையுடன் 8 வருட காதல், வரும் 29ல் திருமணம் – வருங்கால மனைவியுடன் சினேகன் வெளியிட்ட புகைப்படம்.

0
41221
snehan
- Advertisement -

பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆனால், பலரும் சினேகன் தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று கூறினர். அதே போல நிகழ்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை எடுத்தவர் பாடலாசிரியர் சினேகன்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக இருந்து வந்த இவர் தனது ஆரம்ப காலங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பணிபுரிந்தார். பின்னர் தனியாக வந்து பாடல்களை எழுத துவங்கி தற்போது வரை 2500 பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சினேகன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வந்த யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.

- Advertisement -

இந்நிலையில், பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. சினேகன் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தான். இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்துவந்துள்ளனர். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவுசெய்துள்ளனர்வருகிற 29-ந் தேதி சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் வைத்து சினேகன்- கன்னிகா திருமணம் நடைபெற உள்ளது. அன்று காலை 10.45 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருமணத்தை நடத்தி வைக்கிறார்..

-விளம்பரம்-
Advertisement