தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை கன்னிகா அவர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற தொடரில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் தேவராட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின் இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சியாக நடைபெற்றது.
2500 பாடல்களை எழுதியிருக்கும் சினேகன் :
இவர்கள் திருமணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் சமீபத்தில் சினேகன்-கன்னிகா இருவரும் சேர்ந்து பேட்டி ஒன்று அளித்து இருந்தார்கள். அதில் சினேகனின் பாடல்களை பற்றி பலரும் தெரியாத விஷயங்களை பகிர்ந்தார்கள். அதில் அவர்கள் கூறியது, இவர் 2500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இது யாருக்குமே தெரியாது. கடந்து போன பல பாடல்கள் இவர் எழுதியது தான். ஆனால், ஆன்லைனில் போய் பார்த்தால் 600 பாடல்களில் மட்டும் தான் இவர் பெயர் இருக்கும்.
பாடல்களை ரெஜிஸ்டர் பண்ணது கிடையாது
ஏனென்றால் நான் பாடல்களை ரெஜிஸ்டர் பண்ணது கிடையாது. இது எனக்கு சரியா தப்பான்னு தெரியாது. எனக்கு வியாபாரம் பண்ண தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையிலும் நான் மனதார திருப்தியாக வேலை செய்கிறேன். அவ்வளவு தான் என்று சினேகன் சொல்கிறார். உடனே கனிகா, இப்போது ஒரு பாடல் எழுதினாலே பெருமையாக பேசுவார்கள். ஆனால், அவர் எழுதிய பாடல்களை கேட்டால் எல்லோரும் அசந்து போய் விடுவார்கள். அந்த அளவிற்கு அவர் பாடல்கள் அதிகமாக உள்ளது.
சூர்யா படத்தில் சினேகன் எழுதியுள்ள பாடல் :
எல்லா தருணத்திற்கு ஏற்றமாதிரி பாடல் எழுதி உள்ளார். அப்பாவுக்கு ஒரு பாடல், அம்மாவுக்கு, வாழ்க்கைக்கு என எல்லா தருணத்திற்கும் பாடல் எழுதி இருக்கிறார். ஆனால், இது இவர் தான் எழுதினார் என்று பல பேருக்கு வெளியில் தெரியாது. அதோடு மௌனம் பேசியதே படத்தில் என் அன்பே என் அன்பே பாடலை இவர் தான் எழுதினார். ஆனால், யூட்யூபில் போய் பார்த்தால் இவருடைய பெயருக்கு பதில் வேறு ஒருவர் பெயர் இருக்கு. அது பார்த்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
மனைவியை நினைத்து எழுதிய பாடல் :
இதே மாதிரி நிறைய பாடலுக்கு இவர் பெயர் போட்டது கிடையாது. அதேபோல் எப்எம் இல் அவர்களுக்கு பிடித்த கவிஞர்கள் உடைய பெயர் மட்டும் சொல்லுவார்கள். திறமையான கவிஞர்களின் பெயர்களை சொன்னது கிடையாது. சூரரைப் போற்று படத்தில் காட்டுப் பயல என்ற பாடலை அவர் என்னை வைத்து தான் எழுதினார். இந்த பாடல் இவ்வளவு ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், நான் பாட்டு எழுதிய உடனே சொல்லிவிட்டேன் வேற லெவல் வரும் என்று கனிகா கூறியுள்ளார்.