10 ஆண்டுக்கு முன்பே விஜய் டிவி நிகழ்ச்சியில் சோம் சேகர் – வைரலாகும் வீடியோ.

0
1342
som
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதம் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் நடிகர் ஆரி, நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகை ரேகா, நடிகை ரம்யா பாண்டியன், பாடகர் வேல்முருகன், நடிகை சிவானி, நடிகை கேப்ரில்லா என்று ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்கள் பலர் இருந்தாலும், இந்த சீசனில் சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, பாலாஜி முருகதாஸ், சோம் சேகர் என்று ரசிகர்களுக்கு பரிச்சியம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

This image has an empty alt attribute; its file name is 1-58.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோம் சேகரின் என்ட்ரியை பார்த்த போது யார் இவர்கள் என்று தான் அனைவரின் மனதிலும் ஓடியது. ரசிகர்களுக்கு வேண்டுமானால் சோம் சேகர் புதிதான நபராக இருக்கலாம். ஆனால் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே வந்திருக்கிறாராம். கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அந்த நிகழ்ச்சி விஜய்யை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. அதே போல அந்த நிகழ்ச்சியில் இவர் இறுதி போட்டி வரை வந்தார். அதன் பின்னர் இவரை விஜய் டிவியில் காண முடியவில்லை. மேலும், இவர் அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்திருக்கிறார். மேலும் .பல்வேறு விளம்பர படங்களில் கூட நடித்திருக்கிறாராம். ஆனால், இவருக்கு சின்னத்திரையிலும் சரி, வெளியிலும் சரி சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் தனது பாதையை கொஞ்சம் மாற்றிய சோம் சேகர் MMA எனப்படும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் எனப்படும் குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விளையாட்டில் இருந்து வருகிறாராம் சோமசேகர். மேலும், இவர் மாநில மற்றும் தேசிய அளவில் MMA போட்டிகளில் தங்கப் பதக்கங்களை கூட வென்று இருக்கிறாராம். ஆனால் இவருக்கு சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் ஆசை.

-விளம்பரம்-
Advertisement