பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் இளம் நடிகையை மணந்து இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆர்ஜே வாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் சுசித்ரா. பின் இவர் திரை உலகில் மிகப் பிரபலமான பாடகியாக திகழ்ந்தார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். மேலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் இவருடைய கணவர் தான் கார்த்திக் குமார். தனுஷின் யாரடி நீ மோகினி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்தவர் கார்த்திக்குமார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பிரபலமான stand-up காமடியன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சுசித்ரா எப்போதும் சோசியல் மீடியாவில் தேவையில்லாமல் சர்ச்சைகளை கிளப்பி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதோடு இவர் பல பேருடன் தொடர்பில் இருப்பதாகவும், மன அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இதனால் அவருடைய கணவர் சுசித்ரா விடம் இருந்து தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார். பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடகி சுசித்ராவை, கார்த்திக் குமார் விவாகரத்து செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்நிலையில் இளம் நடிகை அமிர்தா சீனிவாசன் என்பவரை கார்த்திக் குமார் திருமணம் செய்திருக்கிறார். மேயாத மான், தேவ் போன்ற படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் நடிகை அமிர்தா சீனிவாசன். தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இவர்களுடைய திருமணத்திற்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.