விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்தனர். இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியே இருந்து நிலையில் பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவிற்கு பின்னர் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் ஆர் ஜேவும் பின்னணி பாடகியுமான சுசித்ரா. இவரை பற்றி சொன்னதுமே நம் நினைவிற்கு முதலில் வருவது சுச்சி லீக்ஸ் தான்.
பின்னணி பாடகியான சுசித்ரா தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடி இருக்கிறார் ஆனால் இவர் மிகப்பெரிய பிரபலமடைந்தது என்னவோ சுச்சிலீக்ஸ் மூலம்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் இருக்கும் எண்ணற்ற பிரபலங்களின் ஆபாச படங்களை பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் சுசித்ரா. ஆனால் இது குறித்து விளக்கமளித்த அவர் தன்னுடைய ஆக்கவுண்ட் யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்றும் தான் எந்த பிரபலங்களில் ஆபாச புகைப்படங்களை வெளியிட இல்லை என்றும் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியிருந்தார் சுசித்ரா.
இதையும் பாருங்க : காமெடி நடிகர் கிங் காங்கிற்கு இவ்ளோ பெரிய மகன் இருக்காரா – அவரே பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.
சுசித்ரா, நடிகரும் மேடைக் கலைஞருமான கார்த்திக் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுசித்ரா, சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய போது கூட சுசித்ராவிற்கு ஆதாரவாக ட்வீட் செய்த கார்த்தி, சுஜித்ரா மன அழுத்தத்தில் உள்ளார் .அவரை அனைவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருத வேண்டும் அவர் குற்றம் சாட்டிய பிரபலங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டதற்கு நன்றி என்றும் கூறியிருந்தார் கார்த்திக்
நடிகர் கார்த்தி, மாதவன் நடிப்பில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர், அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்த இவர், பின்னர் ஸ்டான்ட் அப் காமெடியான இருந்து வந்தார். சுச்சி லீக்ஸ் சர்ச்சை ஏற்பட்ட சில மாதங்களிலேயே இவர் சுசித்ராவை விவாகரத்து செய்துவிட்டார். இப்படி ஒரு நிலையில் சமீபத்திய புகைப்படம் வெளியாகி உள்ளது, அதில் அஜித்தை போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மிகவும் வயதான தோற்றத்தில் இருக்கிறார் கார்த்தி.