பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் இளம் நடிகையை மணந்து இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆர்ஜே வாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் சுசித்ரா. பின் இவர் திரை உலகில் மிகப் பிரபலமான பாடகியாக திகழ்ந்தார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். மேலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி பாடகியான சுசித்ரா தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடி இருக்கிறார் ஆனால் இவர் மிகப்பெரிய பிரபலமடைந்தது என்னவோ சுச்சிலீக்ஸ் மூலம்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் இருக்கும் எண்ணற்ற பிரபலங்களின் ஆபாச படங்களை பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் சுசித்ரா.
இதையும் பாருங்க : நான் அப்படி பண்ணதுக்கு காரணம் இது தான் – சர்வைவருக்கு பின் விஜி வெளியிட்ட முதல் வீடியோ.
ஆனால் இது குறித்து விளக்கமளித்த அவர் தன்னுடைய ஆக்கவுண்ட் யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்றும் தான் எந்த பிரபலங்களில் ஆபாச புகைப்படங்களை வெளியிட இல்லை என்றும் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியிருந்தார் சுசித்ரா. சுச்சி லீக்ஸ் சர்ச்சை ஏற்பட்ட சில மாதங்களிலேயே இவர் சுசித்ராவை விவாகரத்து செய்துவிட்டார்.
இந்நிலையில் இளம் நடிகை அமிர்தா சீனிவாசன் என்பவரை கார்த்திக் குமார் திருமணம் செய்திருக்கிறார். அமிர்தா சீனிவாசன் தமிழில் மேயாத மான், தேவ் போன்ற படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். இவருக்கு வயது 28. கார்த்திக்கு வயது 44. தன்னை விட 16 வயது இளையவரை கார்த்திக் இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார்.