நான் அப்படி பண்ணதுக்கு காரணம் இது தான் – சர்வைவருக்கு பின் விஜி வெளியிட்ட முதல் வீடியோ.

0
414
viji
- Advertisement -

சமீபகாலமாகவே ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமாக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் சர்வைவர். ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி இருந்தார்.

-விளம்பரம்-

முதலில் இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பல சவால்கள் கொடுக்கப்பட்டது. மேலும், பல போட்டிகள், சவால்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது. அனைவரும் எதிர்பார்த்து இருந்த சர்வைவர் நிகழ்ச்சி நேற்று தான் முடிவுக்கு வந்தது. இந்த பைனலில் விஜயலக்ஷ்மி, வனேசா மற்றும் சரன் ஆகிய மொத்தம் 3 போட்டியாளர்கள் களம் இறங்கி இருந்தார்கள்.

இதையும் பாருங்க : ஜெய் பீம் படத்தில் சந்துருவாக சூர்யா தேர்வு செய்து இருந்தது இந்த டாப் நடிகர் தானாம் – பின்னர் அவரே நடிக்க காரணம் இது தானாம்.

- Advertisement -

மற்ற போட்டியாளர்களை எல்லாம் ஜூரியாகத்தான் வந்தனர். யாருக்கு டைட்டில் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். அதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இறுதியில் இந்த சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை விஜயலட்சுமி தட்டிச் சென்றார். இதை தொகுப்பாளர் அர்ஜுன் எமோஷனலாக அறிவித்திருந்தார். ,மேலும், மற்ற போட்டியாளர்கள் நடிகை விஜயலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து கண்ணீர் மழை பொழிந்தார்கள்.

இதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வெற்றி உமாபதிக்கு தான் செல்ல வேண்டும் என்றும் அவரை விஜிய லட்சுமி முதுகில் குத்திவிட்டார் என்றும் சர்வைவர் நிகழ்ச்சியின் பெரும்பாலான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சர்வைவர் பட்டம் வென்ற பின்னர் முதன் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விஜி, தன் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement