பின்னணி பாடகியான சுசித்ரா தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடி இருக்கிறார் ஆனால் இவர் மிகப்பெரிய பிரபலமடைந்தது என்னவோ சுச்சிலீக்ஸ் மூலம்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் இருக்கும் எண்ணற்ற பிரபலங்களின் ஆபாச படங்களை பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் சுசித்ரா. ஆனால் இது குறித்து விளக்கமளித்த அவர் தன்னுடைய ஆக்கவுண்ட் யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்றும் தான் எந்த பிரபலங்களில் ஆபாச புகைப்படங்களை வெளியிட இல்லை என்றும் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியிருந்தார் சுசித்ரா.
சுசித்ரா பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற உடனே கண்டிப்பாக இவர் அணைத்து தவறுகளையும் தட்டி கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் உள்ளே சென்ற சிறிது நாளிலேயே பாலாஜி மற்றும் சம்யுக்தா பக்கம் சேர்ந்துவிட்டார். அதே நேற்று இவர் நீதிபதியாக அமர்ந்த போது தெளிவாக தெரிந்தது. நேற்றய நிகழ்ச்சியில் இவர் தீர்ப்பு வழங்கிய சம்யுக்தா மற்றும் பாலாவிற்கு ஆதராக நின்றார். அதைவிட தீர்ப்பு வழங்கும் போது ஒவ்வொரு முறையும் போட்டியாளர்களின் கருத்து கணிப்பை கேட்டு கையை தூக்க சொல்லை யார் யாருக்கு அதிக ஆதரவு வருகிறதோ அவருக்கு ஆதரவாக தான் தீர்ப்பை வழங்கினார்.
அது போக சுரேஷ் – கேப்ரில்லா விஷயத்தில் கடைசி நேரத்தில் சம்யுக்தா சொன்னார் என்பதர்க்காக மீண்டும் ஒரு பாய்ண்டை முன் வைத்தார். இதனால் சுரேஷ் கூட கோபப்பாட்டார். மேலும், சனம் ஷெட்டியை பேசவே விடாமல் அவரை அங்கு இருந்து வெளியே அனுப்பிவிடுவேன் என்று எச்சரித்து கொண்டே இருந்தார். இப்படி சுச்சயின் செயலை பார்த்து பலரும் இவர் நீதிபதியாக இருக்க தகுதியே இல்லை என்று கூறி வருகின்றனர்.
மேலும், எந்த நீதிபதி கையை தூக்க சொல்லி யாருக்கு ஆதரவு வருகிறதோ அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவர் என்று கழுவி ஊற்றி வருகின்றனர். அதே போல ஆரி பேசிக்கொண்டு இருக்கும் போது பாலாஜி, இடையில் பேசினார் அப்போது ஆரி, தம்பி உனக்கு ஏதாவது பேசணும்னா இங்க வந்து பேசு என்று சொன்னார். ஆனால்,அப்போதும் சுசித்ரா பாலாவை ஒன்றும் கண்டிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல பாலாஜி தருதலை என்று சொன்னது பெரிய வார்த்தை இல்லையே என்றும் கூறியுள்ளார் சுச்சி.