பயில்வான் ரங்கநாதன் மீது போலீசில் புகார், கூடவே தனுஷ் பெயரையும் இழுத்துவிட்ட சுச்சி – புகாரில் குறிப்பிட்டுள்ளதை பாருங்க.

0
448
suchi
- Advertisement -

பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாடகி சுசித்ரா அளித்திருக்கும் புகார் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Radhika Fighting To Bayilvan Ranganathan | ராதிகா பயில்வான்

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு இருக்கிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான்.

- Advertisement -

பயில்வான் ரங்கநாதன் குறித்த சர்ச்சை:

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமா பிரபலங்களை பற்றி பேச ஆரம்பித்த பின் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். சமீபத்தில் கூட பயில்வான் ரங்கநாதன் மீடு புகார் அளிக்கும் நடிகைகள் குறித்து கொச்சையாக பேசி வீடியோ பதிவிட்டு இருந்தார். இதனால் பாடகி சின்மயி உள்ளிட்ட முக்கிய பேர் பலரும் பயில்வான் மீது கடுமையாக கண்டனம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு இருந்தார்கள். அதே போல தன்னை பற்றி தவறாக பேசியதால் பயில்வானை பொது இடத்தில் வைத்து பிரபல நடிகை ராதிகா அடித்ததாக கூட சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.

Bigg Boss Suchithra Screwed Bayilwan | சுசித்ரா பயில்வான்

பாடகி சுசித்ரா குறித்து பயில்வான் சொன்னது:

இப்படி ஒரு நிலையில் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா தன்னை பற்றி தவறாக பேசிய பயில்வான் ரங்கசாமியை போன் செய்து வெளுத்து வாங்கி இருக்கும் ஆடியோ செய்து வெளியாகி இருந்தது. அதாவது, அவர் குடிக்கு அடிமையானவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சுசித்ராவை பேசி இருந்தார். தன்னை பற்றி எப்படி பேசலாம் என்றும் சுசித்ரா வெளுத்து வாங்கி இருந்தார். இந்தநிலையில் பாடகி சுசித்ரா பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் சுசித்ரா கூறியிருப்பது,

-விளம்பரம்-

பயில்வான் மீது சுசித்ரா அளித்த புகார்:

கடந்த மார்ச் மாதம் தனியார் யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் என்னைப்பற்றி அவதூறாக பேசி இருக்கிறார். போதை பழக்கத்திற்கு அடிமையானவர் மற்றும் பாலியல் ஆர்வம் உள்ளவர் போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை என்மீது கூறியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே என்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை தொடர்ந்து பயில்வான் பரப்பி வருகிறார். அவர் என்னைப் பற்றி அவதூறு கருத்துக்கள் பரப்பியதால் சினிமா துறையில் எனக்கு பாடுவதற்கு வாய்ப்பு குறைந்துவிட்டது. என்னுடைய வருமானம் தற்போது ஜீரோவில் இருப்பதற்கு பயில்வான் ரங்கநாதன் தான் காரணம்.

புகாரில் சுசித்ரா கூறியது:

கடந்த 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு என்னுடைய ஐடி ரிட்டன் தாக்கல் செய்தது பார்த்தாலே இது உங்களுக்கு தெரியும். அதுமட்டுமில்லாமல் 2017 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு சுசிலீக்ஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து நான் புகார் அளித்திருந்தேன். அந்த புகார் தொடர்பான போலீஸ் விசாரணையில் தனுஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, கார்த்திக் குமார் உட்பட ஒரு சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தேன். அதேபோல தற்போது பயில்வான் ரங்கநாதன் பின்னணியிலும் அதே நபர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் தன்னுடைய புகாரில் சுசித்ரா தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement