‘நான் யார் படுக்க கூப்பிட்டாலும் போய்டுவேன்னு சொல்லி இருக்கீங்களே’ – போன் செய்து வெளுத்து வாங்கிய சுச்சித்ரா. பம்பிய பயில்வான். லீக்கான ஆடியோ.

0
346
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is suchi.jpg

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார்.மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

இதையும் பாருங்க : உனக்கு புத்தி இருக்கா, இதெல்லாம் லவ் பண்ணும் போது தெரியலயானு அக்கா கேட்டா, செல்வாமணி பற்றி உண்மை தெரிந்து திருமணம் செய்ய மறுத்துள்ள ரோஜா.

- Advertisement -

பயில்வானும் சர்ச்சை பேச்சுகளும் :

அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமா பிரபலங்களை பற்றி பேச ஆரம்பித்த பின் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

வீடியோவில் 6 : 20 நிமிடத்தில் பார்க்கவும் :

பயில்வான் ராதிகா மோதல் :

சமீபத்தில் கூட பயில்வான் ரங்கநாதன் மீடு புகார் அளிக்கும் நடிகைகள் குறித்து கொச்சையாக பேசி வீடியோ பதிவிட்டு இருக்கிறார். இதனால் பாடகி சின்மயி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் பயில்வான் மீது கடுமையாக கண்டனம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதே போல தன்னை பற்றி தவறாக பேசியதால் பயில்வானை பொது இடத்தில் வைத்து பிரபல நடிகை ராதிகா அடித்ததாக கூட சமீபத்தில் செய்திகள் வெளியானது.

-விளம்பரம்-

சர்ச்சையை கிளப்பிய சுச்சி லீக்ஸ் :

இப்படி ஒரு நிலையில் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா தன்னை பற்றி தவறாக பேசிய பயில்வான் ரங்கசாமியை போன் செய்து வெளுத்து வாங்கி இருக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. பின்னணி பாடகியான சுசித்ரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

பயில்வானுக்கு போன் செய்துள்ள சுச்சி :

ஆனால், அதை தான் செய்யவில்லை என்றும் தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுசித்ரா குறித்து பயில்வான் ரங்கசாமி பேசுகையில் அவர் குடிக்கு அடிமையானவர் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பயில்வானுக்கு போன் செய்துள்ள சுசித்ரா தன்னை பற்றி எப்படி பேசலாம் என்றும் வெளுத்து வாங்கி இருக்கிறார். அந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement