ஆஹா, விஜய் பக்கம் திரும்பிய சுச்சி பார்வை – என்ன பதிவிட்டுள்ளார் பாருங்க.

0
1344
suchi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத, ஷிவானி கேப்ரில்லா ஆகியோர் வெளியேறி நிலையில் இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, சோம், ரியோ, ரம்யா ஆகிய 5 பேர் இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த சீஸனின் முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் ஆரி. இந்த சீசனில் அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது.

இதையும் பாருங்க : 6 மாதம் காத்திருந்து பிறந்தநாளில் காதலை சொன்ன நபர் – நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட ’பிகில்’ நடிகை.

- Advertisement -

வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கமல் பற்றியும் போட்டியாளர்கள் பற்றியும் தொடர்ந்து அவதூறாக பேசி வந்தார் சுச்சி.

இதனாலேயே இவரை பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கு கூட அழைக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலை பதிவிட்டு ‘கொஞ்சம் வெயிட் போட்டாலும் சிங்கம் சிங்கம் தான்லே ‘ என்று பதிவிட்டுள்ளார். அதே போல தளபதி Cute Max என்றும் பதிவிட்டுள்ளார் சுச்சி.

-விளம்பரம்-
Advertisement