தந்தை இறப்பு குறித்து பேசியதால் கடுப்பான அர்ச்சனா – சுசித்ரா போட்ட பதிவை பாருங்க.

0
62136
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 64 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெறியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறி இருந்தார். இன்னும் 12 மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த சீசனில் அர்ச்சனாவிற்கு பின்னர் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தவர் ஆர் ஜேவும் பின்னணி பாடகியுமான சுசித்ரா. சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

னவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த சுச்சித்ரா தொடர்ந்து பிக் பாஸ் குறித்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ப்ரோமோவில் அர்ச்சனா கத்தியதை பார்த்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த வாரம் ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் ஒரே நேரத்தில் 6 பேரும் வந்து பேசினால் என்ன செய்வது என ரியோவிடம் வாக்குவாதத்தில்ஈடுபட்டு இருந்தார் .அப்போது ரியோ விளக்கம் கூற முயன்ற நேரத்தில், நீ என்னை நம்பமாட்டாய் நன்றி எனக்கூறி அறைக்குள் செல்கிறார். அவரை சமாதானப்படுத்த சென்ற பாலாஜி, இது ஒரு கேம் டென்ஷன் ஆக வேண்டாம் என கூறுகிறார், அப்போது அர்ச்சனா “என் தந்தை மரணம் விளையாட்டு அல்ல” என்று மிகவும் ஆக்ரோஷமாக கத்தி பேசி இருந்தார் அர்ச்சனா.

அர்ச்சனா பேசிக்கொண்டு இருக்கும் போது இடையில் பேசிய நிஷா, நான் தான் கூறினேன் என்கிறார். அதற்கு அர்ச்சனா யார் கூறினால் என்ன நிஷா? என கோபமாக கேட்கிறார். எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்திருந்தால் அர்ச்சனாவின் தந்தை குறித்து யாரோ பேசியிருப்பது உறுதியாகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள சுசித்ரா, அர்ச்சனா இது போல தொந்தரவாக இருப்பது புடிக்கவில்லை. அவருடைய தவறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர் அனைத்திலும் 100 சதவீதத்தை கொடுக்கிறாரா ? அது எப்படி தவறாகிவிடும் ? என்று பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-

Advertisement