அந்த ஆளுக்கு பயம்னா என்னனு தெரியாது – ஆரி குறித்து பேசிய Evicted போட்டியாளர் – அதுவும் இவர் சொன்னார்னு தான் நம்ப முடியல. வீடியோ இதோ.

0
5072
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது. தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர்.

-விளம்பரம்-

இதுவரை துவங்கங்கப்படாமல் இருந்த கோல்டன் டிக்கெட் டாஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் தான் துவங்கியது. இதுவரை நான்கு டாஸ்க்குகள் நிறைவடைந்த நிலையில் ரம்யா முதல் இடத்தில் இருந்து வருகிறார். மேலும், இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று இறுதி போட்டி வாய்ப்பை பேர அணைத்து போட்டியாளரும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். ஆனால், இந்த ஆரி இதை பெறவில்லை என்றாலும் அவர் தான் வெற்றியாளர் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ஆரி குறித்து இந்த சீசனில் இருந்து வெளியேறிய சுசித்ரா கூறியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அர்ச்சனாவிற்கு பின்னர் பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டவர் சுசித்ரா தான். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார்.

Image

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் ஆரியை ஒட்டுமொத்த ஹவுஸ் மேட்ஸ்ஸும் ஏன் வெறுக்கிறார்கள், அப்படி என்னதான் செய்தார் என்று ரவீந்திரன் கேட்டதற்கு பதிலளித்த சுசித்ரா, சொல்லா ஆரிக்கு பயம் என்றால் என்ன என்று தெரியாது. அந்த ஆளுக்கு அவமானமாக இருக்கட்டும் பின்னால் குத்துவதாக இருக்கட்டும் முன்னால் பேசி சிரிப்பதாக கூட இருக்கட்டும். இது வெளியில் யாருக்காவது நடந்தால் ஒரு சின்ன குழந்தை கூட வந்து கேட்கும் ஏன் இந்த ஆளை இப்படி செய்கிறீர்கள் என்று. ஆனால், அவருக்கு 100% பயம் என்றால் என்ன என்று தெரியாது. ஏதோ நாலு பேர் நம்மைப் பற்றித் தவறாகச் சொன்னால் அதைத்தான் வெளியில் இருக்கும் அவர்கள் நம்புவார்கள் என்பதை பற்றி கூட கவலைப் படாத ஒரு ஆள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement