டான்ஸ்லாம் அடலாம்னு டாக்டர் சொன்னாங்க, ஆனா அந்த Round அப்போ கரு கலைந்து விட்டது – சிவகுமார் சுஜா சொன்ன வருத்தமான செய்தி.

0
554
suja
- Advertisement -

பிபி ஜோடியில் நடனம் ஆடும்போதே கருகலைந்தது என்று மனவேதனையில் சுஜா- சிவா அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஜா வருணி. இவர் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1ல் சுஜா வருணி கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

அதை தொடர்ந்து சுஜா வருணி இரண்டாவது சீசனிலும் விருந்தினராக சில நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருந்தார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுஜா வருணி கலந்து கொண்டு இருந்தார். இருந்தும், இதில் சுஜா இரண்டாவது வாரத்திலேயே எவிக்ஷன் ஆகி வெளியேறி இருந்தார். இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கும் திருமணம் நடைபெற்றது. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார் .

- Advertisement -

சுஜா வருணி-சிவா திருமணம்:

அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்து இருந்தார். இருந்தும் இவரால் சினிமாவில் கொடிகட்டி பறக்க முடியவில்லை. பின் சுஜா-சிவா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சுஜா படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின் சுஜா தன் கணவருடன் சேர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சி:

இதில் சுஜா-சிவா நடனம் வேற லெவெலில் இருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அமீர்-பாவனி டைட்டில் வென்றார்கள்.இரண்டாம் இடத்தை சிவா – சுஜா பிடித்து இருக்கின்றனர். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் சுஜா மற்றும் சிவா இருவரும் பி.பி ஜோடிகளில் நடந்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். அதில், பிபி ஜோடி நிகழ்ச்சியில் பேய்- கடவுள் என்ற சுட்டு நடந்தது. அதில் பயங்கரமாக நடனமாடி இறுதியில் சுஜா கீழே விழுந்துவிட்டார். அவரை அறியாமலேயே யூரின் போய் விட்டார்.

-விளம்பரம்-

சுஜா மற்றும் சிவா அளித்த பேட்டி:

அவளால் இது முடியாமல் நடந்து விட்டது என்று நினைத்தேன். அப்புறமா தான் சுஜா கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. சுஜா அடிக்கடி தலை சுற்றுகிறது, வாமிட்டாக இருக்கிறது என்று சொல்லும் போதெல்லாம் நான் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க கேட்கலாம் என்று சொல்வேன். ஆனால், அவள் நேரம் தவறி சாப்பிடுவதும் தூங்குவதும் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்று என்னை சமாளித்தாள். பின் டெஸ்ட் பண்ணி பார்த்தோம். சுஜா கர்மமாக இருப்பது உறுதியானது. சுஜாவுக்கு ஸ்கேன் செய்து எட்டு வாரம் ஆகிவிட்டது நீங்கள் அம்மாவாக இருக்கிறீர்கள் என்று மருத்துவர் சொன்னார். எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

கருகலைந்தது குறித்து சொன்னது:

பெண் குழந்தை வேண்டும் என்று நான் ரொம்ப ஆசையாக இருந்தேன். பின் மருத்துவரின் ஆலோசனை படி சுஜா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். திடீரென்று சுஜாவுக்கு பீலிடிங் ஆக ஆரம்பித்தது. மருத்துவமனிடம் போய் கேட்டபோது குழந்தை மிஷ்கரேஜ் ஆகிவிட்டது என்று சொன்னார்கள். நான் ரொம்ப மனமடைந்து விட்டேன். பின் மருத்துவர்கள் சுஜாவை முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது அடுத்த ரவுண்டுக்கு மூன்று நாட்கள் தான் இருந்தது. அதை பற்றி கவலைப்படாமல் சுஜா நடனமாடி இருந்தார். இது யாருக்கும் தெரியாத விஷயம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement