லாஸ்லியா தேவயில்லாம பந்தா காண்பிக்கறாங்க.! கடுப்பான பிக் பாஸ் பிரபலத்தின் கணவர்.!

0
11185
losliya

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே இளசுகளின் பேவரைட் என்று ஒருவர் இருக்கத்தான் செய்கின்றனர். முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா என்று இளம் பெண் போட்டியாளர்கள் தான் இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தனர். அதே போல இந்த சீஸனின் ஆரம்பத்தில் லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தார்.

ஆனால், கடந்த சில நாட்களாக இவரது பெயரை இவரே டேமேஜ் செய்து கொண்டு வருகிறார். வடிவேலு பற்றி நக்கலாக நினைத்தது, ஜெயில் டாஸ்கில் ஓவராக செய்தது என்று இப்படி எத்தனையோ காரணத்தால் ரசிகர்கள் சிலர் இவரை வெறுத்து ஒதுக்கி வருகின்றனர்.

இதையும் பாருங்க : கவினை நான் போன வாரம் நாமினேட் செய்யல ஆன இப்போ செய்றேன்.! ஷாக் கொடுத்த போட்டியாளர்.! 

- Advertisement -

இந்த நிலையில் நேற்றய பிக் பாஸ் எபிசோடில் ஹீரோ வில்லன் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது, அதில் லாஸ்லியா சேரனை ஹீரோவாகவும், சாண்டியை வில்லனாகவும் ரேஷ்மாவை சீரோவாகவும் தேர்ந்தெடுத்தார். இந்த நிலையில் நேற்று லாஸ்லியா நடந்து கொண்ட விதம் விசித்தரமாக இருக்கிறது என்றும், அவரது நடவடிக்கையில் ஓவராக பந்தா காண்பிக்கிறார் என்றும் பிக் பாஸ் போட்டியாளர் சுஜா வருணியின் கணவர் சிவகுமார் ட்வீட் செய்துள்ளார்.

ஏற்கனவே, பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பாக விளையாடி வருபவர் அவர் தான். பிலாஸபியெல்லாம் பேசுகிறார்,  ஆனால் கவினுடன் கிராமத்து டாஸ்க்கில் அவர் வழிந்து கொண்டு தான் இருந்தார். அது அவருடைய டாஸ்க் இல்லை என்றாலும் அவர் அதை தான் செய்து கொண்டிருந்தார். அவருடைய இரட்டை முகத்தை அவர் ஏற்கனவே காட்டத்துவங்கிவிட்டார் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement