லாஸ்லியாவை பார்த்தாலே எரிச்சலா இருக்கு.! ட்வீட் செய்த பிக் பாஸ் பிரபலத்தின் கணவர்.!

0
37926
Losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல இளசுகளின் பேவரைட் போட்டியாளராக இருந்து வருபவர் லாஸ்லியா மட்டும் தான். ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளர்களுக்கும் இவர் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார் லாஸ்லியா. லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

-விளம்பரம்-

லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே, லாஸ்லியாவின் பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : வடிவேலுவுடன்லாம் ஒப்பிட்டு என்னை மட்டம் தட்டாதே.! செம கடுப்பான லாஸ்லியா.! 

- Advertisement -

ஆனால், கடந்த சில நாட்களாகவே லாஸ்லியாவிற்கு பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்குபெற்ற சுஜா வருணியின் கணவர் சிவகுமார், லாஸ்லியாவை பற்றி ட்வீட் செய்துள்ளார்.

அதில், என் அறிவுக்கு எட்டிய வரை எந்த ஒரு ஆண் நபரும் புகைப்பிடிக்கும் அறையில் சென்று நான் கண்டது இல்லை. அங்கு பெரும்பாலும் பெண்கள் தான் செல்கின்றனர் இதை பார்க்கும்போது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது அதே போல தற்போதெல்லாம் லாஸ்லியாவை கண்டால் எரிச்சலாகத் தான் இருக்கிறது அவர் செய்வதை எல்லாம் சரி என்று அவர் நினைத்து வருகிறார் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இவர் மட்டுமல்ல லாஸ்லியா மீது பல்வேறு ரசிகர்களும் கொஞ்சம் கடுப்பில்தான் இருந்து வருகின்றனர். அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் முகேன் வடிவேலுவுடன் ஒப்பிட்டு பேசியது லாஸ்லியாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் லாஸ்லியா மற்றவர்களிடம் எல்லாம் தன்னை ஒப்பிட்டு மட்டம் தட்ட வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார் இதனால் வடிவேலுவின் ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவை கழுவி ஊற்றிவருன்றனர்.

Advertisement