இந்த போட்டியாளருக்கு திருமணமா..! பிக்பாஸ் வீட்டில் திருமணம் பற்றி அறிவித்த நடிகை.! யாருக்கு தெரியுமா..?

0
201
Suja

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக சீசன் 1 போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக தங்கி வருகின்றனர். இதில் சமீபத்தில் நடிகர் ஆரவ் தனது முதல் படமான “பீமராஜா” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை பிக் பாஸ் வீட்டில் வெளியிட்டார். தற்போது சீசன் 1 போட்டியாளரான சுஜா வருணி தனது திருமணம் குறித்த தகவலை பிக் பாஸ் வீட்டில் தெரிவித்துள்ளார்.

Suja
நேற்று (செப்டம்பர் 15) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல், அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது சுஜா பேசுகையில் வரும் நவம்பர் மாதம் எனக்கு திருமணம் நடக்க போகிறது சார் என்று கூறுகிறார். ஆனால், சுஜா திருமணம் செய்துகொள்ளலும் நபரை பற்றி எதுவும் சொல்லவில்லை. அனால், அவர் திருமணம் செய்துகொள்ளபோகும் நபர் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ், இவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது . “சிங்கக்குட்டி” படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது சுஜா வருணி, சிவாஜி தேவ்வை காதலித்து வருகிறார் என்று சில தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

suja

அண்மையில் நடிகை சுஜா மற்றும் சிவாஜி தேவ் இருவரும் திருப்பதியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை கூட நடிகை சுஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட பதிவிட்டிருந்தார். சுஜா நீண்ட வருடங்களாக சிவாஜி தேவை காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்தம் கூட நடந்து முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் தனது திருமண அறிவிப்பு குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார் நடிகை சுஜா.