திருமண நாளில் தனது குழந்தையின் முகத்தை முதன் முறையாக காட்டிய பிக் பாஸ் சுஜா.

0
72519
Suja
- Advertisement -

விஜய் தொலைகாட்சியின் பிரபலமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் முதல் இடம் என்று சொன்னால் அதற்கு நிகரில்லை விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த சீசனில் ஆரவ் முதல் பரிசையும் சினேகன் இரண்டாம் பரிசையும் தட்டி சென்றனர் .

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-152.png

- Advertisement -

இந்த சீசனில் பங்குபெற்ற அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். அந்த வகையில் பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். மேலும், பல்வேறு படங்களில் ஐட்டம் சாங்ஸ்களுக்கும் நடனமாடியுள்ளார் நடிகை சுஜா வருனி.

இதையும் பாருங்க :கோமாள இருந்தியா. நகுலை கிண்டல் செய்த 90ஸ் கிட். பதிலடி கொடுத்த நகுலின் மனைவி.

கடந்த ஆண்டு இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்ட சுஜா வருனி திருமணமான சில மாதங்களிலேயே சுஜா வாருணி கருவுற்று இருந்தார். மேலும், இவரது சீமந்த புகைப்படங்களை கூட அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சுஜா வருணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள அவரது கணவர் என்னுடைய சிம்ஹா பிறந்துவிட்டான் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுஜா மற்றும் சிவகுமார் தம்பதியினர் இன்று (நவம்பர் 19) தங்களது முதல் திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதனால் முதல் முறையாக தனது குழந்தையுடன் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை முதன் முறையாக வெளியிட்டுள்ளனர். மேலும், தனது பிள்ளைக்கு ஆத்வைத் என்று பெயர் வைத்துள்ளனர். நடிகர் அஜித்தின் மகன் பெயர் ஆத்விக் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது ஸ்டைலில் மகனுக்கு சுஜாவும் பெயர் வைத்துள்ளார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement