பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பெரும்பாலும் பெரிய ஹீரோக்களை மட்டும் வைத்து தான் படம் எடுப்பார் என்ற குற்றசாட்டு நிலவி வந்தது. ஆனால், இயக்குனர் ஷங்கர் புதுமுகங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட படம் ‘பாய்ஸ்’. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலமே பரத், மணிகண்டன், சித்தார்த் என்று பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல்.
பாய்ஸ் படத்தில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்த நகல் இன்று தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார். பாய்ஸ் படத்தில் மிகவும் குண்டாக இருந்த நகுல் அதன் பின்னர் வெளியான காதலில் விழுந்தேன் படத்தில் தனது உடலை முற்றிலும் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். காதலில் விழுந்தேன் படத்திற்கு பின்னர் தமிழில் மாசிலாமணி, கந்தக்கோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார் நகுல்.
இதையும் பாருங்க : தளபதி 64 படத்தின் தலைப்பு இது தானா. இன்னிக்கு விஜய் ரசிகர்களுக்கு இது தான் ட்ரீட்.
மேலும், நடிகர் நகுல் பிரபல நடிகையான தேவயானியின் சகோதரர் என்பது தெரியும் ஆனால் நகுலின் மனைவியை பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நடிகர் நகுல் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் நடிகர் நகுல் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிர்குருந்தார்.
அதில் 50 முதல் 80 வரை வாழ்ந்த தலைமுறைகள் தான் மிகவும் சந்தோஷமான தலைமுறை. நாம்தான் ரோட்டில் விளையாடி இருக்கிறோம் ,அதேசமயம் வீடியோ கேம்களை விளையாடி இருக்கிறோம். டாம் அண்ட் ஜெர்ரி,கேப்டன் கங்காரு போன்ற நிகழ்ச்சிகளை பார்த்து சந்தோஷப்பட்டு இருக்கிறோம், நாம் தட்டையான திரை, சரவுண்ட் சவுண்டு, பேஸ்புக், டுவிட்டர், கணினி இன்டர்நெட் போன்றவற்றை கண்டதில்லை. ஆனாலும், நாம் தான் சிறந்த தலைமுறையாக அனுபவிக்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கண்ட இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர். அப்போது 90 ஸ் கிட்ஸ் கிடையாதா ?ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்றவைகளெல்லாம் 90 ஸ்ஸில் வந்ததா 90ஸ்ஸிலிருந்து நீங்கள் கோமாவில் இருந்தீர்களா என்று கமெண்ட் செய்திருந்தார்.
தனது கணவரை கிண்டல் செய்த இந்த நபருக்கு பதிலடி கொடுத்த நகுலின் மனைவி, நானும் 90 ஸ் தான். இந்த பதிவில் அப்படி என்ன தவறாக இருக்கிறது. அவர் ஒன்றும் இந்த பதிவை எழுதவில்லை. அவர் இந்த பதிவினை பகிர்ந்து தான் இருக்கிறார். ஒரு விஷயத்தை வரவேற்பதற்கு பதிலாக எதற்காக அதில் இருக்கும் குறையை சொல்லி இப்படி வேறுக்கிறீர்கள் என்று பதில் கொடுத்துள்ளார்