பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரும் நடிகருமான ஆரவ்விற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருந்து வருகிறது இந்த சீசனில் பங்குபெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.
ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா இவர் மீது தீராத காதலில் இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ராஹி என்பவரை தான் ஆரவ் திருமணம் செய்து கொண்டுள்ளார் ஆரவ். நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம்நேற்று , செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரண், விஜய், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதே போல ஆரவ்வுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பிந்து மாதவி, சக்தி, சினேகன், கணேஷ் வெங்கட் ராமன், சுஜா வருணி என்று பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அதே போல பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் ஆரவ்விற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஆரவ்வை உருகி உருகி காதலித்து வந்த ஓவியா திருமண நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல தனது சமூக வலைதளத்தில் கூட ஆரவ்விற்கு எந்த ஒரு வாழ்த்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.இப்படி ஒரு நிலையில் ஆரவ் திருமணத்திற்கு சென்ற சுஜா வருணியிடம் ரசிகர் ஒருவர், ஓவியா எங்க அக்கா என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சுஜா வருணி, அவங்க வீட்ல இருப்பாங்க என்று பதில் அளித்துள்ளார்.