இரவில் 8 மணிக்கு குழந்தையை என்னை தேய்த்து குளிப்பாட்டுவேன். சுஜா சொன்ன காரணம் பாருங்க.

0
95813
suja
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று இருந்தது. ஆனால், ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில் முதல் பரிசினை ஆரவ்வும் இரண்டாம் பரிசினை கவிஞர் சினேகனும் தட்டி சென்றார்கள். இந்த சீசனில் பெண் போட்டியாளர்களில் மிகவும் பிரபலமான அவர்களில் ஒருவராக இருந்து வந்தார் நடிகை சுஜா வருணி.

-விளம்பரம்-

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே இவர் பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும் ஒரு சில படங்களில் ஐட்டம் டான்ஸர் ஆகவும் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் ஏற்படுத்தி தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த அமலி துமலிகளை ரசிகர்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட வனிதாவை போல இவரும் பிக் பாஸ் முதல் சீசனில் ஒரு சவுண்ட் பார்ட்டியாக இருந்து வந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்ட சுஜா வருனி. அதற்கு முக்கிய காரணமே திருமணமான சில மாதங்களிலேயே சுஜா வாருணி கருவுற்று இருந்தார். கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சுஜா வருணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த அவரது கணவர் என்னுடைய சிம்ஹா பிறந்துவிட்டான் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், சுஜா வருணியம் அடிக்கடி தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தனது மகனை குளிப்பாட்டும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், தனது மகனை இரவு நேரத்தில் தான் குளிப்பாட்டுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மருத்துவரின் ஆலோசனை படி இரவு நேரத்தில் என்னை தேய்த்து குளிப்பாட்டினாள் பகல் நேரத்தில் குழந்தைக்கு ஏற்படும் உடல் வலிகள் நீங்கி சூடு தணிந்து இரவில் நிம்மதியாக தூங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு குழந்தையை இப்படி குளிப்பாட்டினால் நல்லது என்றும் குறிப்பிட்டள்ளார்.

Advertisement