சுஜா வருணி காதலன் இவரா..? பிரபல நடிகரின் பேரனா..? சுஜா வெளியிட்ட புகைப்படம் உள்ளே..!

0
3109
suja-varunee

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் விரைவில் நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகப்போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இளைய திலகம் பிரபுவின் அண்ணன் ராம் குமாரின் மகன் சிவாஜி தேவை, சுஜா நீண்ட வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறகிறது. சமீபத்தியல் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்தம் கூட நடந்து முடிந்துவிட்டதாகவும் , எனவே, இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் சினிமா வட்டாரங்களில் ஒரு சில செய்திகள் பரவி வருகிறது.

-விளம்பரம்-

suja

இந்நிலையில் நடிகை சுஜா மற்றும் சிவாஜி தேவ் இருவரும் திருப்பதியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகை சுஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனவே இந்த புகைப்படத்தின் மூலம் இவர்கள் இருவரும் காதலித்து வருவது உறுதி என்று ரசிகர்கள் கணித்துள்ளனர். ஆனால் இதுவரை தனது காதல் குறித்தோ, காதலரை குறித்தோ நடிகை சுஜா இதுவரை வாய் திறக்கவே இல்லை.

Advertisement