விருதை கொடுத்த அசிங்கப்படுத்திய விஜய் டிவி..! கோபத்தில் சுஜா..! நிஜத்தில் நடந்த காமெடி

0
2219
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதில் இருந்து அணைத்து போட்டியாளர்கள் ஒருவொருவரும் ஒரு ராகம். அதிலும் குறிப்பாக சொல்ல போனால் ஜூலி ,காயத்ரி , சுஜா போன்ற ஒருவரையும் மக்கள் மறக்கவே மாட்டார்கள் .அதிலும் அந்த நிகழ்ச்சியில் பாதியில் வந்த சுஜா செய்த நாடகங்கள் ஏராளம

bigg boss

- Advertisement -

மேலும் சுஜாவிற்கும் விருதிற்கும் ராசியே இல்லை போல ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது ஜூலி இவருக்கு நாடககாரி என்ற விருதினை வழங்கினார் ஆனால் அந்த விருதினை பெற்ற சுஜா என்னை விட மிகப்பெரிய நாடக காரியிடமிருந்து இந்த விருதை பெறுவதில் மகிழ்ச்சி என்று கூறியிருந்தார் . அதே போன்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சுஜாவிற்கு அளித்த விருதை திரும்ப பெற்றுள்ளனர்.இதனை சுஜாவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் காண்பிப்பது போல ஒரே ஒரு சால்வையை வைத்து அனைவருக்கும் தரும் சம்பவத்தை போலவே இவரது வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் விஜய் டிவி தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு “pride of the channel ” என்ற விருது வழங்கப்பட்டது .இதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கு சில விருதுகள் கொடுத்துள்ளார்கள் , அப்போது சுஜா மற்றும் கணேஷிற்கு ஒரு விருது கொடுத்தார்கள். இருவருக்கும் சேர்த்து ஒரு விருது கொடுத்துள்ளார்கள். அந்த விருதை கணேஷ், சுஜாவை வைத்துக்கொள்ளும் படி கூறியுள்ளார்.

-விளம்பரம்-

suja actress

அப்போது மேடையிலிருந்து கீழே இறங்கிய விழா அமைப்பாளர்கள் சுஜாக் கு அளிக்கபட்ட விருதை திரும்ப தரும்படி கேட்டுள்ளனர். மேலும் அதே விருதை தான் அடுத்தவர்களுக்கு தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். அதனால் சுஜா கடும் கோவமடைந்து அந்த விருதை திருப்பி கொடுத்துள்ளார் .மேலும் அந்த தொலைக்காட்சிக்கு ஒரு விருது கூட தரமுடியாதா “என்றும் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement