லைவ் சென்று கொண்டு இருக்கும் போது வந்த போன் கால் – அசிங்கசிங்கமாக திட்டிய சுரேஷ். வைரலாகும் வீடியோ.

0
8189
suresh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாகஐந்தாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசனில் சோமசேகர், பாலாஜி முருகதாஸ் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத போட்டியாளர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒரு சிலருக்கு தெரிந்த முகமாக இருந்தாலும் பலருக்கு இவரைப்பற்றி தெரியாமல்தான் இருந்தது. ஆரம்பத்தில் இவரை அனைவருமே ஒரு டெரரான பீஸ் என்றுதான் நினைத்தார்கள். அதேபோல இவர் இந்த சீசன் வனிதா என்றும் பலரும் விமர்சித்து வந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால் போகப்போக இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து இவருக்கு என்று ஒரு தனி ஆர்மியே அமைந்துவிட்டது. என்னதான் ஒரு சில நேரத்தில் மற்ற போட்டியாளர்களை வேண்டுமென்றே வம்பு இழுந்தாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் சுரேஷ் மற்ற போட்டியாளர்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல தான் செய்யும் தவறுகளை மிகவும் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் இதனாலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது. சுரேஷும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தான். இவர் விசு, எஸ் பி பி என்று பல்வேறு ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும், இவர் தனது 19 வயதிலேயே ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா அறிமுகமானார். அந்த படத்தில் எஸ் பி பியும் நடித்திருந்தார்.அதன் பின்னர் தமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் “வாக்குமூலம்” என்றபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஷாக்காக தான் இருந்தது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த கையேடு பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய யூடியூப் தொலைபேசி எண்கள் கொடுத்துக் கொண்டிருந்தா.ர் அப்போது அவரது செல்போனில் ஏதோ அழைத்துவர, உடனே கோபப்பட்டு சுரேஷ் சக்ரவர்த்தி லைவ் சென்று கொண்டிருக்கிறது நொய் நொய்னு போன் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அசிங்கமான வார்த்தை பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement