உள்ளே இருந்த இறுதி நாட்களில் நிஷா கையால் மட்டும் சாப்பிட்ட சுரேஷ். நிஷா குறித்து ஒரே வார்த்தையில் இப்படி அசிங்கபடுத்திட்டாரே,

0
1722
suresh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக பாதி சீசனையே இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசனில் சோமசேகர், பாலாஜி முருகதாஸ் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத போட்டியாளர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒரு சிலருக்கு தெரிந்த முகமாக இருந்தாலும் பலருக்கு இவரைப்பற்றி தெரியாமல்தான் இருந்தது. ஆரம்பத்தில் இவரை அனைவருமே ஒரு டெரரான பீஸ் என்றுதான் நினைத்தார்கள். அதேபோல இவர் இந்த சீசன் வனிதா என்றும் பலரும் விமர்சித்து வந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால் போகப்போக இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து இவருக்கு என்று ஒரு தனி ஆர்மியே அமைந்துவிட்டது. என்னதான் ஒரு சில நேரத்தில் மற்ற போட்டியாளர்களை வேண்டுமென்றே வம்பு இழுந்தாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் சுரேஷ் மற்ற போட்டியாளர்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டுவந்தார். அதேபோல தான் செய்யும் தவறுகளை மிகவும் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் இதனாலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துவந்தது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஷாக்காக தான் இருந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு சில நாட்கள் முன்பாக சுரேஷ் சக்ரவர்த்தி வெறும் சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிட்டு வந்தால் மற்றவர்கள் எவ்வளவு சமாதானம் செய்தும் அவர் இறுதிவரை நிஷா சமைத்த உணவை மட்டும் தான் உண்டுவந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுரேஷ் சக்ரவர்த்தி இது குறித்து பேசுகையில் நீதிமன்ற டாஸ்க்கில் தனக்கு எதிராக கை தூக்கிய அழைத்து நபர்களின் சமையலை இனி சாப்பிடக் கூடாது என்று முடிவு எடுத்தேன் என்று கூறியிருக்கிறார்.

பிக் பாஸில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் குறித்து பல பேட்டிகளில் பங்கேற்று வந்தார். அதே போல தற்போதும் போட்டியாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் எதாவது பதிவுகளை போட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நிஷா குறித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி ‘Neesha(m) Vesham’ (இது வேஷமா இல்லை விஷமா என்பது அவருக்கே வெளிச்சம்) என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement