பிக் பாஸ் கமல், சர்வைவர் அர்ஜுன், மாஸ்டர் செப் Vjs – யார் யாருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா ?

0
8333
- Advertisement -

ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனலின் டிஆர்பிரேட்டிற்காக புதுப்புது வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரே நேரத்தில் பிரபலமான மூன்று சேனல்களில் உலகம் முழுவதும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் சினிமா துறையில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் சம்பளம் குறித்து சோசியல் மீடியாவில் பல சலசலப்புகள் எழுந்து உள்ளன.

-விளம்பரம்-

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நேரத்தில் மூன்று சேனல்களிலும் மூன்று ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பி வருகிறது. சன் டிவியில் மாஸ்டர் செஃப், ஜீ தமிழ் சேனலில் சர்வைவர். இந்த இரண்டு நிகழ்ச்சியும் தொடங்கிவிட்டது. விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரத்தில் ஒளிபரப்பாகும் என்று தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த ஆனந்தி – இவருக்கு இவ்ளோ பெரிய மகனா.

- Advertisement -

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசனும், சர்வைவர் நிகழ்ச்சியை அர்ஜுனும், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விஜய்சேதுபதியும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் மூவரும் சம்பளம் குறித்து சோசியல் மீடியாவில் கசிந்து கொண்டிருக்கிறது.

அது என்னவென்றால், பிக்பாஸில் கமலஹாசனுக்கு சம்பளமாக ஒருநாள் சூட்க்கு 4 கோடி ரூபாய். அதாவது வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் வரும் கமலஹாசனுக்கு விஜய் டிவி வழங்கும் சம்பளம் ஆகும். இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்கள் வழங்கினாலும் கமலஹாசனின் சூட் ஒரே நாள் தான். அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5யில் கமலஹாசனின் மொத்த கால்ஷீட் 15 நாள். அதாவது பிக் பாஸ் சீசன் 5 முழுவதுமே கமல்ஹாசன் சம்பளமாக 60 கோடி பெறுகிறாராம்.

-விளம்பரம்-

அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதிக்கு ஒரு எபிசோடுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது தவிர சன் டிவியுடன் 15 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விஜய் சேதுபதி பேசப்பட்டு வருகிறது. அதனால் தான் துக்ளக் தர்பார் உள்ளிட்ட சில படங்களின் டிவி உரிமையும் சன் டிவி கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

MasterChef Tamil' launches, Vijay Sethupathi impresses in new avatar - The  Hindu

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ஜுனுக்கு மொத்தமாகவே சம்பளம் 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் தயாரித்து வரும் அவரது மகள் நடிக்கும் சில படங்களையும் ஜீ தமிழ் சேனல் வாங்கலாம் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. மேலும், இந்த வருடம் இந்த மூன்று ரியாலிட்டி ஷோக்கள் மக்களுக்கு ஒரு பயங்கர என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement