பிக் பாஸ் வீட்டுக்குள் நாங்கள் வந்தால் பல பேர் தெறித்து ஓடிவிடுவார்கள் ! நடிகர் ஓபன் டாக்

0
886
Bigg-Boss

விஜய் தொலைக்காட்சி ரசிகர்களிடேயே தற்போது லிஸ்டில் அபிமான நிகழ்ச்சியாக இருந்து வருவது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தான். இரண்டவது சீசனை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு கண்டிப்பாக பிரபலம் கிடைத்து விடும். அதனால் இதில் கலந்துகொள்ள பல்வேறு பிரபலங்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

bigg boss

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் பங்குபெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தால் நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள் ? என்ற கேள்வி தான் பல பிரபலங்களிடமும் கேட்கபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கேள்விக்கு பிரபல நடிகர் அதர்வா பதில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவரான அதர்வா, தற்போது ‘பாண காத்தாடி’ படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ”செம போத ஆகாதே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக ‘காவிய தலைவன் ‘ படத்தில் நடித்த நடிகை அணைக்கா சோட்டி நடித்துள்ளார்.

ponnambalam

சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகர் அதர்வாவிடம் ,பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொண்டால் என்ன செய்வீர்கள் என்று கேள்விகேட்கப்ட்டது. இதற்கு நடிகர் அதர்வா ‘நான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை கூட கண்டது இல்லை. ஒருவேளை நான் அந்த வீட்டினுள் சென்றால் அந்த நிகழ்ச்சி வேறு ஒரு நிகழ்ச்சியாக மாறிவிடும்’ என்று கிண்டலாக பதில் கூறியுள்ளார்.