இப்படி இருந்த ஆரியின் அம்மாவின் உயிரை பிரித்த ‘Parkinson’ நோய் என்பது இது தானா?

0
2329
- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று சென்று கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வில் நடத்த சோகங்களையும் மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஆரி பேசுகையில் தனது வீட்டில் அனைவருமே படித்து ஓரளவிற்கு செட்டில் ஆகி விட்டார்கள் ஆனால் நான்தான் படிப்பு வராமல் அப்படியே அழுத்தி கொண்டு இருந்தேன் அப்போது எனது தந்தை எனது சிறு பகுதியை விற்று ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து என்னை சென்னைக்கு வழி அனுப்பி வைத்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் சென்னையில் ஒரு மஞ்சப் பையோடு வந்து இறங்கிய நான் பின்னர் சினிமாவில் எப்படியோ வாய்ப்பைத் தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் சேரன் மூலமாக எனக்கு பட வாய்ப்பு வந்திருந்தது . அந்த படத்தின் பெயர் ‘ஆடும் கூத்து’ அந்த படம் சிறந்த தமிழ் மொழிக்கான தேசிய விருதை பெற்றது. ஆனால் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. என்னுடைய முதல் படமே திரையரங்கில் வெளி வராமல் போனது மிகவும் வருத்தமான விஷயம் என்று கூறியிருந்தார் ஆரி.

- Advertisement -

அதன் பின்னர் என்னுடைய தந்தை இறந்துவிட்டார். தந்தை இறந்த பின்னர் என்னுடைய அம்மா என்னை கவனித்துக்கொள்ள சென்னைக்கு வந்து விட்டார். ஒரு முறை திடீரென்று என்னுடைய அம்மா எழுந்து அப்பா எங்கே என்று அலைந்து கொண்டிருந்தார் எனக்கு ஒன்றுமே புரியவில்லை பின்னர் ஏன் என்று கேட்டதற்கு தூக்கத்தில் உன் அரிதாக சொல்லிவிட்டார் அப்போதுதான் தெரிந்தது என்னுடைய அம்மாவிற்கு பார்க்கின்சன் நோய் இருக்கிறது என்று அந்த நோய் வந்தால் நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாது கைகால்கள் எல்லாம் சரியாக வேலை செய்யாது.

View this post on Instagram

அனைவருக்கும் வணக்கம் உங்கள் ஆரி அருஜுனா 🙏 இந்த மண்ணில் யார் இல்லாமல் பிரவேசத்திற்க முடியாதோ, யாரை இழந்து விட்டால் மீண்டும் பெற இயலாதோ அவள் பெயர் தான் தாய், என்று விவேகானந்தர் சொல்லி இருக்கிறார், பிள்ளைகளைப் பொறுத்தவரை வீட்டில் விருப்பப்பட்ட உணவு இருந்தால் வீட்டில் சாப்பிடுவோம், அப்பாக்களை பொறுத்தவரையில் உணவு ருசியாக இருந்தால் வீட்டில் சாப்பிடுவார், நம் அம்மாவைப் பொறுத்த வரையில் வீட்டில் மிச்சம் இருந்தால் மட்டுமே உணவை உண்ணுபவள், உலகத்திலேயே தனக்காக சொத்து சேர்க்காத அப்பாக்களும் தனக்காக சமைக்காத தாயும் உண்டென்றால் அது நம் மண்ணில் தான், அந்தப் பெருமை எப்பவும் நம்ம இந்தியாவுக்கு உண்டு, தாயை மறவாமல் இருப்போம், தாய்மையை போற்றுவோம், அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

A post shared by Aari Arujunan (@aariarujunanactor) on

என்னுடைய அம்மா பின்னர் ஒருமுறை ஒரு பட வாய்ப்பிற்காக என்னை சந்திக்க ஒருவர் வீட்டுக்கு வந்த போது மாடியில் இருந்து நடந்து வந்த போது என் அம்மா நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். அப்போது அவருக்கு பின் மண்டையில் அடிபட்டு விட்டது அதன் பின்னர் அவர் ஒரு குழந்தை போல மாறி விட்டார். நாகேஷ் திரையரங்கம் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது என் அம்மா இருந்து விட்டதாக கூறி இருந்தார் ஆரி.

-விளம்பரம்-

ஆரியின் அம்மாவிற்கு இருந்த நோய், Parkinson எனப்படும் நடுக்குவாதம் நோய் தான். பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கத்திறன்கள், பேச்சு மற்றும் மற்ற செயல்பாடுகள் சீராக இயங்காது. மூளையின் செயல்பாடுகளை ஒன்றாகிய உடலியக்கங்களை ஒருங்கிணைத்தல் பாதிப்படைவதால் இந்நோய் ஏற்படுகின்றது.இந்நோயின் மிக இலகுவான அறிகுறியானது நடுக்கமாகும் (tremors). இது ஆரம்பத்தில் ஒரு கையில், அந்தக் கை ஓய்வு நிலையில் உள்ளபோது ஏற்படும். பாதிப்படைந்த கையால் வேலை செய்யும்போது நடுக்கம் குறையும். மனச் சோர்வு, கோபம் ஏற்படும்போது நடுக்கம் அதிகரிக்கும். 

Advertisement